பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்கரே தியாகி அல்லவாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 30, 2021

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்கரே தியாகி அல்லவாம்!

பா... சாமியாரிணியின் அடாவடி பேச்சு

போபால், ஜூன் 30- மாலேகான் குண்டுவெடிப்பில் இந்துத்துவா பயங்கரவாத சதியை அம்பலப்படுத்தி பிரக்யாசிங் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்த வரும், மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று,பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது, அவர்களோடு எதிர்த்து சண் டையிட்டு தனது உயிரை இழந்தவருமான ஹேமந்த் கார்கரே குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாமியாரிணி பிரக்யாசிங் தாக்குரின் அடாவடிப் பேச்சு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

மராட்டிய மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக துணிச்சலுடன் செயல்பட்டு வந்தவர். அவரின் தியாகத்தை மதித்து, ஒன்றிய அரசு மிக உயர்ந்தஅசோக் சக்ராவிருதை வழங்கி சிறப்பித்தது.

இந்நிலையில், பெண் சாமியாரிணியும், போபால் தொகுதி பாஜக மக்களவை உறுப்பின ருமாகிய பிரக்யா சிங் தாக்குர் பேசுகையில்கார்கரே ஒன்றும்தியாகி அல்ல!’ என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் அவர் பேசுகையில், “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நான் கைது செய்யப்பட்டபோது, தனிப்பட்ட முறையில் அதனை 1975ஆம் ஆண்டின் நெருக்கடி காலத் தைப் போல் உணர்ந்தேன். சிலர் ஹேமந்த் கார்கரேவை ஒரு தியாகி என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மையான தேசபக்தர் அவ்வாறு நினைக்கமாட்டார். ஹேமந்த் கார்கரே 8ஆம் வகுப்பு பயிலும்போதே ஆசிரியரின் கையை முறித்தவர். என்னையும் போலி ஆதாரங்களின் பேரில் சிறையில் தள்ளினார். இது ஜனநாயகமா?” என்று பிரக்யா சிங் தாக்குர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 2019 ஏப்ரல் மாதத்தில் அவர் பேசுகையில்,  மாலேகான் வழக்கால், நான் ஏராள மான கொடுமைகளை அனுபவித்தேன்; அதற்கு என்னைக் கைது செய்த ஹேமந்த் கார்கரேதான் காரணம்; அதனால் நான் அவரைச் சபித்தேன்; அவருடைய குடும்பமே அழிந்து போக வேண்டும் என்று சபித்தேன்; என் சாபம் பலித்தது; அவரு டைய கர்மவினையால் அந்த வருடமே அவர் கொல்லப்பட்டார்என்று கூறியிருந்தார்.

இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி மட்டுமே பேசப்பட்டுவந்த நேரத்தில், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பை; (இதில் 6 பேர்பலியாகினர்; 100-க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர்) இது இந்துத்துவா பயங்கர வாதிகளின் சதிவேலை என்றுபுலனாய்வு செய்து கண்டுபிடித்தவர் தான் ஹேமந்த் கார்கரே. அப் போது அவர் கைது செய்த பயங்கரவாதக் குற்ற வாளிகள் 11 பேரில் பிரக்யா சிங் தாக்கூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment