ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

உலகப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியை நோக்கி செல்லுகையில், இந்தியப் பொருளாதாரம் பின்னோக்கிச் செல்கிறது. ஆனால், இரு குஜராத் பெரு நிறுவன முதலாளி களின் வளர்ச்சி வேகமாக நடைபெற்றுள்ளது என மூத்த பத்திரிகையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

தி ஹிந்து:

பொருளாதார சுருக்கத்தின் பின்னணியில், பொது நிறு வனங்களை தனியார்மயமாக்கும் வேகமான நடவடிக்கை களை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்வது விவேகமா னது என இந்திய அரசாங்கத்தின் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர் அஜய் சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

தி டெலிகிராப்:

ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அறிவித்துள்ள ரூ.6.29 லட்சம் கோடி நிதி உதவிகளில் எவ்வளவு உண்மையானது என்பது குறித்து பொருளாதார வல்லுநர்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளனர்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment