தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு

 சென்னை,ஜூன் 21- தமிழ்நாட்டில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு 21.6.2021 வரை அமல்படுத்தப் பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டி லுள்ள மாவட்டங்களை 3 வகைகளாக பிரித்து ஜூன் 28ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படு வதாக அரசு தெரிவித்துள்ளது.

வகை 1 (11 மாவட்டங்கள்):- கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஏற் கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடு கள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப் படும்.

வகை 2 (23 மாவட்டங்கள்):- அரிய லூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ் ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக் கோட்டை, ராமநாதபுரம், ராணிப் பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண் ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப் புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங் களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத்தளர்வு களும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.  அவை, மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனு மதிக்கப்படும். காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப் படும். உணவகங்கள் மற்றும் அடுமனை களில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல் பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர் களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.  சார்பதிவாளர் அலுவலகங்கள் முழு மையாக இயங்க அனுமதிக்கப்படும். அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். வாடகை வாகனங் கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் -பதிவுடன் செல்ல அனு மதிக்கப்படுவர். மேலும் வாடகை டாக் சிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணி களும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனு மதிக்கப்படுவர்.

வகை 3 (4 மாவட்டங்கள்):- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனு மதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுக ளுக்கான நேரத் தளர்வுகளும், கூடு தலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.  உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார்பதி வாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்.  அனைத்து தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனு மதிக்கப்படும் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும்

மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். நிலையான வழிகாட்டு நடைமுறை களைப் பின்பற்றி மெட்ரோ ரெயில் போக்குவரத்து 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக் கிடையே பொது பேருந்து போக்குவ ரத்து நிலையான வழிகாட்டு நடை முறைகளைப் பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும் 50 சதவீத இருக் கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.  வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் -பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டாக்சிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக் களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment