புதுடில்லி, ஜூன் 21- கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மூன்றாவது அலை யாக இந்தியாவில் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் தாக்கும் ஆபத்து உள்ளது என்றும், கரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளைவிட மூன்றாம் அலை மிக தீவிரமானதாக இருக்கும் என்றும் டில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.
டில்லி
எய்ம்ஸ் மருத்துவமனை இயக் குநர் ரன்தீப் குலேரியா அளித்த பேட் டியில் அவர் கூறியதாவது:
கரோனா
இரண்டாம் அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் ஊர டங்கு போன்ற
கட்டுப்பாடுகளில் பெரிய அளவில் தளர்வுகள் வழங்கப்படுவதை பார்க்க முடிகிறது. தளர்வுகள் அதி கரிக்க அதி கரிக்க, மக்கள் மத்தியில் வைரஸ் தொடர் பான விழிப்புணர்வு பல மடங்கு குறைகிறது.
முகக்கசவம் அணிதல், சமூக இடை வெளியை பின்பற்றுதல் போன்ற வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கைவிட்டு வருகின்றனர். இதனை உற்று நோக்கும் போது, பெருந்தொற்றின் முதல் அலை, இரண்டாம் அலையில் இருந்து நாம் பாடம் ஏதும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. ஆகவே, மிகக்குறுகிய காலத்தில் கரோனா மூன்றாம் அலையை நாம் எதிர்பார்க்கலாம். இந்தியாவை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் வைரசின் மூன்றாம் அலை தாக்கக் கூடும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத் துதல், வைரஸ் தடுப்பு விதிமுறைகளை கடுமையாக்குதல் போன்ற நடவடிக்கைகளால் மூன்றாம் அலையை நாம் சிறிது வேண்டுமானால் தாமதப்படுத்தலாம். ஆனால், அதனை தவிர்க்க முடியாது. எனவே, மூன்றாம் அலையை எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
வைரஸ்
தடுப்பு விதிமுறைகளை மட்டும் பின்பற்றுவதில் எந்த பயனும் இல்லை என்பதை நாம் உணர வேண் டும். அதனுடன் கூடுதலாக, வைரஸ் உருமாற்றம் அடைவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஏனெனில், பிரிட்டனில் இருந்து வந்த புதிய வகை உருமாற்ற வைரஸால் தான், இந்தியா வில் கரோனா இரண்டாம் அலை தீவி ரமடைந்தது. ஆதலால், விமான நிலை யங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பகு திகளை கடுமையான வைரஸ் சோத னைக்கு உட்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல, வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கும்போது, எந் தெந்த பகுதிகளில் தினசரி பாதிப்பு அதிகமாக பதிவாகிறதோ அங்கெல் லாம் சிறிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment