முதல் அமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு
சென்னை, ஜூன் 29- கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக் குகள் திரும்பப்பெறப்ப டும் என்று தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை சென்னை பத்திரிகையா ளர் சங்கம் (M.U.J.) வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பொதுச் செயலாளர் எல்.ஆர்.சங்கர் விடுத்துள்ள அறிக் கையில் சட்டப்பேரவை யில் ஆளுநர் உரைமீதான விவாதத்திற்கு பதில் அளித்துப்பேசிய முதல மைச்சர் கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையா ளர்கள் மீது பதிவு செய்யப் பட்ட அனைத்து வழக்குக ளும் திரும்பப்பெறப்படும் என்று சொல்லியிருக்கி றார். இந்த அறிவிப்புக்கு சென்னை பத்திரிகையா ளர் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உச்சபதவிகளை அடைந்த போதிலும் தன்னை பத் திரிகையாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்பட்டவர். அந்த உணர்வோடு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்தவர். அவருடைய தொடர்ச்சியாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு சென்னை பத்திரிகையா ளர் சங்கம் நன்றியும் பாராட் டும் தெரிவித்துக் கொள்கி றது என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment