மேகதாதுவில் அணை கட்டுவதாக அறிவித்த எடியூரப்பா உருவபொம்மை எரிப்பு விவசாயிகள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 20, 2021

மேகதாதுவில் அணை கட்டுவதாக அறிவித்த எடியூரப்பா உருவபொம்மை எரிப்பு விவசாயிகள் போராட்டம்

 மன்னார்குடி, ஜூன் 20-  மேகதாது அணை கட்டு வதை யாரும் தடுக்க முடியாது என கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டூரில் அவ ரது உருவ பொம்மையை எரித்து (19.6.2021) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முதலமைச் சர் மு..ஸ்டாலின் கடந்த 17ஆம் தேதி பிரதமர் மோடியை டில்லியில் நேரில் சந்தித்து தமிழக வளர்ச்சி குறித்து பேசினார். மேலும், காவிரியின் குறுக்கே கருநாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அணை  கட்டு மான பணிகளுக்கு அனு மதி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி கடி தம் அளித்தார்.

இந்நிலையில் கருநா டக முதலமைச்சர்  எடியூ ரப்பா, மேகதாது அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது, கட்டியே தீரு வேன், தேசிய பசுமை தீர்ப் பாயம் அதற்கான அனு மதி கொடுத்துள்ளதாகக் கூறியது தமிழ்நாடு விவ சாயிகளிடம் கொந்த ளிப்பை ஏற்படுத்தி உள் ளது. அவரது அறிவிப் புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடப்பாறு ஆற்றங்கரையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் தலை மையில் எடியூரப்பா உருவ பொம்மையை எரித்து  விவ சாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment