உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னை,ஜூன்20- தமிழ் நாட்டில் குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலி னத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும் எனக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி சுப்பையா அடங் கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்கு ரைஞர் ஆர்.சண்முகசுந்த ரம், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப் படும். தமிழகத்தில் மொத்த முள்ள 11,449 மூன்றாம் பாலினத்தவர்களில், குடும்ப அட்டை வைத் துள்ள 2,956 பேருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 8493 பேருக் கும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றார். இதை பதிவு செய்த நீதி பதிகள், அரசின் உதவித் தொகை வழங்கும் திட் டத்தை தவறாகப் பயன் படுத்த கூடாது. உண்மை யான மூன்றாம் பாலினத் தவர்களின் பெயர், முகவ ரியை தெரிவிக்க வேண் டும். உதவித்தொகை பெறா மல் விடுபட்டவர்கள் குறித்து தெரிவிக்குமாறும் உத்தர விட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment