ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்
புதுடில்லி,
ஜூன் 24- ஒன்றிய அரசு கரோனா 3ஆம் அலையை எதிர் கொள்ளத் தயாராக வேண்டுமென வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமரின் கண்ணீர் உயிர்களை காப்பாற்றாது’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரோனா
பரவலை கட்டுப்படுத் துவதில் ஒன்றிய அரசின் செயல் பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று முன்தினம் (22.6.2021) செய்தி யாளர்களை சந்தித்தார்.
அப்போது
ஒன்றிய அரசின் கரோனா மேலாண்மை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின் ராகுல்காந்தி கூறியதாவது:-
கரோனா
முதல் மற்றும் 2ஆவது அலையை ஒன்றிய அரசு கையாண்ட விதம் பேரழிவு என்பது அனைவரும் அறிந்ததே. கரோனா 2ஆம் அலையை பிரதமர் மோடி தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவர்
மேற்கு வங்கம் மற்றும் பிற மாநில தேர்தலில் போட்டி போடுவ திலேயே குறியாக இருந்துவிட்டார். பிரதமரின் கண்ணீரால் சொந்தங் களை இழந்தவர்களின் கண்ணீரை துடைத்து விட முடியாது. பிரதமரின் கண்ணீர் உயிர்களை காப்பாற்றாது. ஆனால் ஆக்சிஜன் காப்பாற்றும். ஒன்றிய அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவதற்காக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. இந்த நாடு கரோனா மூன்றாவது அலைக்கு தயாராவதற்கு உதவுவதற் காகத்தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
மூன்றாவது
அலை தாக்கும் என் பதை இந்த உலகமே நன்கு அறியும். மூன்றாவது அலைக்கு பிறகும் கரோனா வைரஸ் பிறழ்வு ஏற்படக் கூடும் என்ற அளவிற்கு சூழல் உள் ளது. எனவே, கரோனா மூன்றாவது அலைக்கு ஒன்றிய அரசு தயாராக இருக்க வேண்டும். 2ஆவது அலை மோசமாக இருந்ததால், 3ஆவது அலையும் மோசமாக இருக்கக் கூடும். எனவே, 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். கரோனாவை எதிர்த்து போரிடுவதில் தடுப்பூசி முக்கிய ஆயுதம். ஆகவே, முடிந்த வரையில் சீக்கிரமாக அனை வருக்கும் தடுப்பூசி போடவேண்டும். இதில் ஒரு நாள் சாதனை எல்லாம் போதாது. தினமும் அதிகப்படியா னோருக்கு தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசு பாகுபாடு பார்க்கக் கூடாது. பா.ஜ.க.
ஆளும் மாநிலம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என பிரித்துப் பார்க்கக்
கூடாது. அனைவருக்கும் போதிய அளவு தடுப்பூசி வழங்கப்பட வேண் டும்.
இவ்வாறு
ராகுல் காந்தி தெரிவித்தார்.
No comments:
Post a Comment