நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, ஜூன்
24 தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பிறகு பெட் ரோல், டீசல் விலை நிச்சயம் குறைக் கப்படும் என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் அ.தி.மு.க. உறுப்பினர் அக்ரி
கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப் போது நடந்த விவாதம் வருமாறு:-
பெட்ரோல்,
டீசல் விலை
அக்ரி
கிருஷ்ணமூர்த்தி (அ.தி. மு.க.):- பெட்ரோல், டீசல் விலை கரோனா காலத்திலும், தற்போதும் கடுமையாக உயர்ந்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என்று தி.மு.க.
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி யாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல், விலை குறைப்பு பற்றி நிதி அமைச்சர் பேட்டியளிக்கும்போது, இப் போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
அமைச்சர்
பி.டி.ஆர். பழனிவேல்
தியாகராஜன்:- 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த தி.மு.க.
3 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது. 2014-ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான செஸ் வரி 9 ரூபாயாக இருந்தது. அப்போது, ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. பெட்ரோல் மீதான
வரியை 28 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தியது. 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க.
பொறுப்பெற்ற பின் ரூ.9.48 இருந்து ரூ.21.48 ஆக செஸ் வரியை
உயர்த்தியது. இன்றைய நிலையில் 4 சதவீதம்தான் 31 மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க கூடிய வரியாக உள்ளது. 96 சதவீதம் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது.
எதிர்பார்க்கவில்லை
செஸ்
வரியை எல்லாம் ஒரு காரணத்துக்காகத்தான் எடுக்க வேண்டும். ஆனால் செஸ் வரி கூறப்பட்ட காரணத்துக்கு முழுமை யாக பயன்படுத்தாமல், மறைமுக மாக ஒன்றிய அரசே
முழுமையாக எடுத்துக்கொள்கிறது. அதனை பகிர்ந்து கொடுக்காமல் அவர்களே முழுமையாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். அது மட்டு மல்லாமல், தமிழ்நாடு அரசின் வரி எந்த அளவில் இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும்.
கரோனாவின்
இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர் களுக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி உதவிகளும், பொருள் உதவிகளும், மருத்துவத்துக்கும் செலவிட்டு இருக்கிறோம். மொத்த உற்பத்தியில் 1 சதவீதத்தை இதற்காக செலவு செய்து இருக்கிறோம். அதை நாங்களும் எதிர்பார்க்கவில்லை. அது மட்டுமல்லாமல் வட்டி சுமை யும் நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்தது.
நிதி
நிலைமை மோசம்
அதனால்
கரோனா நிவாரண மாக ரூ.4 ஆயிரம் என்பதை இரண்டு தவணையாக கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், தேர்தல் அறிக்கையில் இல்லாததை எல்லாம் செய்து கொடுத்தோம். அதாவது பொருட்கள், உதவிகளுக்கு செலவு பண்ணலாம் என்று செலவு செய் யப்பட்டது. இப்படி எல்லாம் செலவு செய்ததால் இப்போதைக்கு பெட்ரோல்., டீசலுக்கான வாட்’ வரியை குறைக்க முடியாது. ஏனென் றால் நிதி நிலைமை அவ்வாறு இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில், ஒரே மாதத்தில் செய் வோம் என்று என்றைக்கும் நாங்கள் சொன்னது இல்லை. இருந்த சூழ்நிலை நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தது. அதையும் தாண்டி முதல்-அமைச்சர் கொடுத்த முக்கியமான வாக்குறுதியை செய்து கொடுத்தோம்.
தமிழகத்தின்
நிதி நிலைமை சரி யான பிறகு, அப்போது உறுதியாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு அறிவிப்பை நாங்கள் நிறை வேற்றுவோம். மக்களுக்கு உணவு, கையில் பணம் கொடுக்க வேண்டும் என்பதற்குதான் முக்கியத்துவம் கொடுத்தோம். பெட்ரோல், டீச லுக்காக வாட் வரி குறைப்பை இன் றைக்கு செய்யவில்லை என்றாலும், என்றைக்காவது ஒரு நாள் முதல்-அமைச்சர் செய்தே கொடுப்பார்.
இவ்வாறு
அவர் பேசினார்.

No comments:
Post a Comment