கரோனாவின் முதலாவது அலை முடிந்து இரண்டாவது அலை பெருந் தாக்குதலாக அமைந்தது. முதல் அலையால் உயிர் இழந்தவர்களைவிட இரண்டாம் அலையால் உயிர் இழப்புகள் அதிகம்.
ஆட்சியின்
முதல் படிக்கட்டில் காலை எடுத்து வைக்கும் போதே கரோனா என்ற கடும் பகை சவாலாக முன்னே வந்து நின்றது தி.மு.க.
ஆட்சிக்கு.
இதனை
எப்படி சமாளிக்கப் போகிறது தளபதி மு.க. ஸ்டாலின்
தலைமையிலான தி.மு.க.
அரசு என்ற அச்சம் பொதுவாக இருந்தது.
சரியான
திட்டம், சாதுர்யமான செயல்பாடுகளால், அந்த சவாலை தி.மு.க.
அரசு சமாளித்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் முதல் சுற்றிலேயே சபாஷ் பட்டம் வாங்கி விட்டார் நமது முதல் அமைச்சர்.
இன்னும்
சொல்லப் போனால் முதன்மை எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களே மனந்திறந்து பாராட்டும் அளவுக்கு ஆட்சியின் செயல்பாடுகள் மிகவும் நேர்த்தியாக இருந்தன.
ஆட்சியின்
வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் ஒன்றிய அரசு செயல்படவில்லை என்பது யதார்த்தமே!
தமிழ்நாடு
சட்டமன்றத்தில் மேனாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் (அ.இ.அ.தி.மு.க.)
பேச்சும், இன்றைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலும் ஆரோக்கியமாகவே அமைந்திருந்தன.
சி.விஜயபாஸ்கர் (விராலிமலை, அதிமுக): தமிழகத்தில் கரோனா மூன்றாவது அலை வராது என்றே இறைவனை வேண்டுவோம். ஆனாலும், மூன்றாவது அலை வரும் என்ற எண்ணத்தையே மனதில் வைத்து சுகாதார கட்டமைப்பை பன்மடங்கு உயர்த்த வேண்டும். மூன்றாவது அலை குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கக் கூடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தில், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. அந்த வயதை உடையவர்கள் 1.71 கோடி பேர் உள்ளனர். அவர்களில் 10 முதல் 12 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டாலும், அது 20 லட்சம் என்ற அளவில் இருக்கும். அவர்களில் 10 முதல் 20 சதவீதம் அதாவது 2 லட்சம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எழக்கூடும்.
இவற்றையெல்லாம்
கருத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான படுக்கையை (1 லட்சம் என்ற அளவில்) தயார் செய்ய வேண்டும். நோய்த் தொற்று பாதிக்கப்படும் குழந்தையுடன் இருக்கும் தாய்க்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில், தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 6.06 கோடி பேர் உள்ளனர். அவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர், 1 கோடி பேர். இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தியோர் 24 லட்சம் பேர். எனவே, தடுப்பூசி போடுவது தொடர்பாக மக்களிடையே உள்ள தயக்கத்தைப் போக்க வேண்டும். அது அரசின் கடமை.
அமைச்சர்
மா. சுப்பிரமணியன் பதில்: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. ஓரிரு நாள்களில் முற்றிலும் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். தடுப்பூசியைப்
பொறுத்தவரையில் ஜூன் மாதத்தில் 42 லட்சமும், ஜூலையில் 71 லட்சமும் வர வேண்டியுள்ளது. நமது
மாநிலத்தில் நாளொன்றுக்கு 7 முதல் 8 லட்சம் மக்களுக்கு தடுப் பூசிகளை செலுத்தக் கூடிய கட்டமைப்பு உள்ளது. இதுவரை 1 கோடியே 29 லட்சத்து 22 ஆயிரத்து 310 தடுப்பூசிகள் வந்துள்ளன. ஒரு கோடியே 24 லட்சத்து 51 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி தேவையின் அளவு 10 கோடியாக உள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பூசிதான் தீர்வாக இருக்கிறது. கிராமங்களிலும் மக்கள் விழிப்புணர்வு பெற்று தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் உருவாகும். கடந்த மே 7-ஆம் தேதிக்கு முன்பாக (திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு) நாளொன்றுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 441. ஆனால், இப்போது தினசரி சராசரி அளவு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 926 ஆக இருக்கிறது.
மூன்றாவது
அலையை எதிர்கொள்வது குறித்து, முதலமைச்சர் தினமும் ஆலோசித்து வருகிறார். கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் புதிதாக 79 ஆயிரத்து 518 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் உருளைகள், செறிவூட்டிகள் தயார் நிலையில் உள்ளன. மூன்றாவது அலை வரவே கூடாது என்பதே நமது எண்ணம். ஆனால் அது வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மூன்றாவது
அலை குறித்துப் பல்வேறு முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கூறப்பட்டாலும், மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப் பேரவையில் கூறியது போலவே, மூன்றாவது அலை வருவதாகவே நினைத்துக் கொண்டு முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமே!
எவ்வளவுக்கெவ்வளவு
தடுப்பூசிப் பணியை நூறு விழுக்காடு முடிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பாதுகாப்பானதாகும்.
பிற
இடங்களிலிருந்து தடுப்பூசிகள் வருவதை எதிர்பார்ப்பதைவிட தமிழ்நாடு அளவிலேயே தடுப்பூசியைத் தயாரிப்பது தான் புத்திசாலித்தனம் மட்டுமல்ல- போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பாக இருக்கும்.
செங்கற்பட்டில்
உள்ள ஒரு நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை மேற்கொள்ள வசதி இருக்கிறது என்ற நிலையில் அதற்கான அனுமதியை பெறுவதில் நிருவாக சிகப்புமுறை முட்டுக்கட்டையாக இருப்பது கவலைக்குரியதாகும்.
தமிழ்நாட்டைச்
சேர்ந்த பா.ஜக.. பொதுச்
செயலாளர் ஒருவர் இதுபற்றிக் கருத்துகள் கூறும்போது "அது என்ன கடலை மிட்டாய் தயாரிப்பா?" என்று கேலிப் பேசுவது அவர்களுக்கே உரித்தான கீழிறக்கக் குணமாகும்.
இப்பொழுது
உள்ள சூழ்நிலையில் மூன்றாவது அலையின் தாக்குதல் பெரிய அளவுக்கு இருக்குமானால் மக்கள் மீட்சி அடைவதில் பெரும் அளவு இடர்ப்பாடாக இருக்கும்.
ஊரடங்கில்
தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுப்புணர்ச்சியுடன் அணுகாமல், அவிழ்த்து விடப்பட்ட ஒன்றாகக் கருதி மனம் போன போக்கில் மக்கள் நெருக்கம் என்ற தன்மையில் நடந்து கொண்டால் அதற்கான கடும் விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.
கரோனா
அச்சம் அறவே ஒழிந்து, நம் வீட்டுப் பிள்ளைகள் கல்வி நிலையங்களுக்கு சர்வ சாதாரணமாக செல்லும் ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற "சுயநல அடிப்படை"யிலாவது திருவாளர் பொது மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அரசுக்காக
அல்ல - நமக்காக
- நம் குடும்பத்தினருக்காக உற்றார்- உறவினர்களுக்காக என்ற
அளவிலாவது சிந்திப்பார்களாக - செயல் படுவார்களாக!
No comments:
Post a Comment