அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதைத்தான் சொல்கிறோம்!
சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணித்தரம்!
சென்னை,
ஜூன் 24- சட்டத்தில் இருப் பதைத் தான் சொல்கிறோம். ஒன்றியம் என்ற வார்த் தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவை யில்லை என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டப் பேரவையில் ஆணித்தரமாகப் பதில ளித்தார்.
சட்டப்பேரவையில்
நேற்று (23.6.2021) ஆளுநர் உரை மீதான விவாதத்தில் சட்ட மன்ற பா.ஜ.க.
கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, சமீப காலமாக ‘ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு’ என்று கூறி வருகிறீர்கள் என்று குறிப்பிட்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குறுக்கிட்டு ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து அளித்த விளக்கம் வருமாறு:-
‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டி ருக்கிறார்கள். அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டி ருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.
ஒன்றியம்
என்பது தவறான சொல் அல்ல!
நமது
அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங் களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்றுதான் உள்ளது. ‘‘India, that is Bharat, shall be a Union of States'' என்றுதான்
இருக் கிறது. அதைத்தான் பயன்படுத்துகி றோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.
‘ஒன்றியம்’
என்பது தவறான சொல் அல்ல, ‘மாநிலங்கள் ஒன்றுசேர்ந்தது’ என்பது தான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் அண்ணா சொல்லாததை, எங்கள் தலைவர் கலைஞர் சொல் லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, அதை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க.வினுடைய
1957ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே 'இந்திய யூனி யன்' என்றுதான் அடையாளப்படுத்தப்பட் டிருக்கிறது. 1963 ஜனவரி 25, நாடாளுமன்ற மாநிலங்களவையில், அண்ணா பேசுகிற போது, குறிப்பிட்டார். “அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள் ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது, பொதுமக்களிடம் நிலைத்துள்ளது என அரசமைப்பின் முகவுரை
கூறுகிறது.
சட்டம்
சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங் களுக்கும் இடையே - அதாவது மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது" என்றுதான் அண்ணா பேசியிருக்கிறார்.
ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை!
‘சமஷ்டி’
என்ற வார்த்தையை ம.பொ.சி.
பயன்படுத்தியிருக்கிறார்.
'வெளி யேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு - வருக உண்மையான கூட்டாட்சி' என்று ராஜாஜியே எழுதியிருக்கிறார்.
எனவே,
ஒன்றியம் என்ற வார்த் தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த் தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத் தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம், பயன் படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டேயி ருப்போம்”.
இவ்வாறு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விளக்கமளித்தார்.

No comments:
Post a Comment