ஆசிரியருக்குக் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

ஆசிரியருக்குக் கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு! வணக்கம்!

தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிகளால் மக்களுக்கு நன்மைகள்  கிடைக்கிறதோ; இல்லையோ! தீமைகள் மிகுதி யாகவே கிடைக்கின்றன. தேவையற்ற செய்தி களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், அதனையே திரும்ப, திரும்ப ஒளி பரப்புவதும் வாடிக்கையாகிவிட்டது. மேலும் விளம் பரங்களை அதிக அளவில் காட்டுவதோடு, அரை குறை ஆடையுடன் பெண்களின் உள்ளாடை மற்றும் சோப்பு விளம்பரங்களில் ஒளிபரப்பி வருவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு சங்கடமான சூழலை உருவாக்குகிறது.

‌‌‌‌‌‌அதேபோன்று,.  தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப் பாகும் தொடர்கள் தமிழ் சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் , சினிமாவையே மிஞ்சக்கூடிய வகையில் பெண்களே பெண்களை துன்புறுத்துவதும், அடியாட்கள் மூலமாக பெண்களை கடத்துவதும் திருமணமான ஆண்களின் மீது பற்று வைப்பதும் காட்சிகளாக சித்தரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. சினிமா காட்சிகள் இரண்டரை மணிக்குள்ளாகவே அமைந்திருக்கும்.நாமும் அதனை பார்த்துவிட்டு அவைகளை மறந்தே விடுவோம். ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் தொடர்கள் ஆண்டு கணக்கில் ஒளிபரப்பாகின்றன.அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆர்வத்தை உண்டாக்கி பார்ப்ப வர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.   தந்தை பெரியார் அவர்கள் பெண்களின் முன்னேற்றத் திற்காக, அதாவது ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாழவேண்டும் என்ற நோக்கில் பாடுபட்டோர்களோ, அதனையெல்லாம் அழிக்கும் சிந்தனைகளோடு, குறிப்பாக பெண்ணினத்தின் முன்னேற்றத்தையும், குடும்பஉறவுகளை சிதைக்கும் வகையிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளி வந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. மேலும் பெண்கள் தவறான பாதைக்கு சென்றுவிடும் அபாயமும் உள்ளது. ஆதலால் சினிமா துறைக்கு தணிக்கைச் சட்டம் இருப்பதுபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தணிக் கைச் சட்டத்தை மத்திய அரசு அவசியம் கொண்டு வரவேண்டும்.

.இளங்கோவன்

பொன்னி நகர், மயிலாடுதுறை?

No comments:

Post a Comment