ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 20, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     தொற்று குறைந்த மாவட்டங்களில் பொது போக்கு வரத்து சேவைக்கு அனுமதி வழங்க தமிழ் நாடு அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜவுளி, நகைக்கடைகளை அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி திறக்க அனுமதிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

·     கரோனாவின் மூன்றாவது அலை கணிக்க முடியாத தாக உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும் என் கிறார் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அமோக ஆதரவு தந்ததற்காக மக்களை இழிவு படுத்த முயற்சிக்கும் மேற்கு வங்க ஆளுநர் தன்கர் நீக்கப் பட வேண்டும் என அக்கட்சியின் முகுல் ராய் தெரிவித்து உள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     உண்மையான எதிர்ப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நீதிபதிகளால் கவனிக்க முடிகிறது என்றால், பிரதமர் மோடியாலும், அவரது அமைச் சர்களாலும் ஏன் காண முடியவில்லை என்கிறார் மூத்த எழுத்தாளர் தல்வீன் சிங்.

·     ஆகம விதிகள்படி,  (கோயில்களில் வழிபடுவதற்கான கையேடு) பெண்கள் அல்லது எந்த குறிப்பிட்ட ஜாதியினரும் சடங்குகளைச் செய்ய தடை இல்லை. பழங்கால நூல்கள் யாரையும் கோவில் சடங்குகளில் இருந்து தடுக்கவில்லை என்கிறார் சைவ அர்ச்சகரான நடராசன்.

- குடந்தை கருணா

20.6.2021

No comments:

Post a Comment