மனிதாபிமானச் செயல் மூளைச்சாவு அடைந்த புதுப்பெண் உடல் உறுப்புகள் கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 20, 2021

மனிதாபிமானச் செயல் மூளைச்சாவு அடைந்த புதுப்பெண் உடல் உறுப்புகள் கொடை

விருதுநகர், ஜூன் 20- இரு சக்கர வண்டி யில் கணவருடன் சென்ற போது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததால், திருமணமான 4ஆவது நாளில் புதுப் பெண் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் கொடையால் 4 பேர் புதுவாழ்வு பெற்றனர்.

விருதுநகர் மாவட்டம் மறவர் பெருங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ப வருடைய மகன் சங்கர்ராஜ் (வயது 27). இவர் சென் னையில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், சுத்த மடம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மகள் முத்துமாரிக்கும் (24) கடந்த 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

பின்னர் பந்தல்குடியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு சங்கர்ராஜிம், முத்து மாரியும் விருந்துக்கு சென்றுவிட்டு கடந்த 16ஆம் தேதி மறவர்பெருங்குடி கிராமத்திற்கு இரு சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது இரு சக்கர வண்டியில் இருந்து நிலைதடுமாறி முத்துமாரி தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவருக்கு திருச்சுழி அரசு மருத் துவமனையில் முதல் உதவி அளிக்கப் பட்டு பின்னர் மதுரையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் முத்துமாரி நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். டாக்டர்கள் கூறியதன் அடிப்படையில் முத்துமாரியின் உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க அவரது கணவர் மற்றும் பெற்றோர் முன் வந்தனர்.

இதையடுத்து நேற்று அவரது சிறு நீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை கொடையாக வழங்கி னார். திருமணம் முடிந்த 4 நாட்களி லேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த முத்து மாரியின் உடல் உறுப்புகள் கொடை யால் 4 பேர் புதுவாழ்வு பெற்றுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment