"பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகளின்" பின்னூட்டக் கருத்துக்கள்
மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.
அவ்விவரம் வருமாறு:
அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே!
மதுரை மண்டலத்தில் கடந்த 15 நாட்களாக சிறப்பாக நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று நீங்களெல்லாம்அறிவு வழியில் சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கித் தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியையும் மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், இந்நிகழ்வை ஒருங்கிணைத்த மாவட்டச் செயலாளர் சுப.முருகானந்தம், இணைய உதவிசெய்த செல்வி.மீனாட்சிசுந்தரம் ஆகியோருக்கு பாராட்டுகளையும், பயிற்சியளித்த பேராசிரியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் அனைத்து முகாம்களையும் சிறப்பாக வழிநடத்தி நடைபெற உழைத்த பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார் அவர்களுக்கும், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யபொறுப்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
வே.செல்வம்
அமைப்பு செயலாளர்
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நமது பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது கடந்த 15,16 நாட்களாக நாம் ஒன்றிணைந்து பயணித்தது பல ஆண்டுகள் பயணித்தது போல ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியது நாம் அனைவரும் இந்தப் பயிற்சி வகுப்பையும் கடந்து, நல்ல நண்பர்களாக வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கோரிக்கை, காரணம் வாழ்க்கையில் எவ்வளவுதான் நாம் மேலே சென்றாலும் நாம் சேர்க்க முடியாத ஒரே விஷயம் நல்ல நண்பர்கள் அத்தகைய நல்ல நட்பு வட்டத்தை நாம் உருவாக்கி பெரியார் அம்பேத்கர் கொள்கையை வாழ்க்கையில் ஏற்று நாம் தொடர்ச்சியாக சுயமரியாதையோடு செல்வோம் நன்றி வணக்கம்
ராகுல், மதுரை
வணக்கம், தந்தை பெரியார்மீதும் அவருடைய கருத்துகள் மீதும் எனக்குஒரு சிறு புரிதல் இருந்தாலும் அதை இன்னும் ஆழமாக்கி இருக்கிறது இந்த வகுப்பு.
உண்மையில் எனக்கு வகுப்பு இன்றோடு முடிந்துவிட்டது என்று சொன்னபோது வருத்தமாக இருந்தது. இன்னும் சில நாட்கள் இவ்வகுப்பு நடந்து இருக்கலாம் என்று தோன்றியது.
எனக்கு இவ்வகுப்பு மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக அமைந்துவிட்டது என்பது உண்மை.
இப்படிப்பட்ட நல்ல வகுப்பை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வகுப்பை எனக்கு அறிமுகப்படுத்திய என் ஆசிரியர் கண்மணி அம்மாவுக்கும் என்னுடைய மிகப்பெரிய ஒரு நன்றி.
சு.அ.யாழினி
ஒன்பதாம் வகுப்பு
சமயபுரம்-திருச்சி
இன்றைய வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மிகவும் சுவாரஸ்யமான வகுப்பு. சமூக சீர்திருத்தவாதிகளைப் பற்றி அறிந்து கொண்டோம். கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி நன்கு அறிந்தோம். மிக்க நன்றி அய்யா
எம் போன்ற இளைய சமுதாயத்தின் திராவிட தாகத்தை தீர்க்க இது போன்ற முன்னேற்பாடுகள் மிகவும் உதவியாக இருந்தது.
பகுத்தறிவு மேன்மை பெற உத்வேகத்தை அளித்த அனைத்து பெரியோர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றிகள்
ர. சாய் சரவணன்,
திருவிடைமருதூர்,
கும்பகோணம்.
கழக பெரியோர்களுக்கும் பெரியாரியல் பயிற்சி வகுப்பு மாணவர் களுக்கும் வணக்கம். இத்தனை நாட்கள் பெரியார் சமூக நீதிக்கும் ஜாதி ஒழிப்பிற்கு ம் போராடிய ஒரு தலைவர் என்று மட்டும்தான் அறிந்திருந்தேன். இந்த பதினைந்து நாள் வகுப்பானது அவருடைய சிந்தனை எண்ணம் எழுத்து அறிவு எப்படி இருந்தது என என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.யாருக்கோ பிரச்சினை நமக்கென்ன என ஒதுங்கிப் போகும் இந்த சமூகத்தில் பிறர் பிரச்சினையை தன் பிரச்சினையாக கையில் எடுத்து போராடி அத்தனை கஷ்டங்களையும் சந்தித்து தன் வாழ்நாள் முழுவதும் அவர் உழைப்பை எண்ணி மெய்சிலிர்க்கிறது. இப்போது என்னால் அவர் ‘மனக்குகையில்’ சிறுத்தை எழும் என்னும் வார்த்தையின் அர்த்தத்தை உணர முடிகிறது.என்னை இந்த வகுப்பில் இணைத்த கழக மாவட்டத் தலைவர் அண்ணன் நிம்மதிக்கு மனமார்ந்த நன்றிகள்.
பெரியாரியல் பயிற்சி மாணவர்
தஞ்சை
அனைவருக்கும் வணக்கம். இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக, நம் சிந்தைனைகளைத் தூண்டுவதாகவும் - பெரியார் பற்றி மட்டுமல்லாமல் நம் அனைவரும் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்றும், பகுத்தறிவோடு செயல்படவும் நமக்கு கற்றுதந்துள்ளது. இந்த தொற்று காலத்திலும் நம் அனைவரையும் மனதோடும், அன்போடும் இணைத்த அனைத்து கழக தோழர்களுக்கும், இந்த வகுப்பில் கலந்துகொண்டு வகுப்பு எடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும், என் சக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கண்மணி.சி
இளம் மருந்தியல் பட்டதாரி
அண்ணாமலை பல்கலைக் கழகம்- சிதம்பரம், திருநாகேசுவரம்
வணக்கம் அய்யா,
தஞ்சாவூர் மண்டலம்,பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நடத்தும், பெரியாரியல் பயிற்சி வகுப்பினை காணொலியின் மூலம் மாணவர்களின் அறிவை மேம்படுத்த, இந்த கரோனா காலத்திலும் எவ்வித இடையூறுமின்றி சிறப்பான நாட்களாக அமைய ஏற்படுத்திய, எங்களின் தமிழர் தலைவர் கி.வீரமணி தாத்தாவிற்கு முதலில் நன்றினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியார் என்றால் ஜாதியை ஒழிக்க போராடினார்,நாத்திகர் என்னும் சில கருத்துகள் மட்டுமே எனக்கு தெரியும்....ஆனால் இந்த வகுப்பினில் கலந்து கொண்டபின் நிறைய கருத்துகளை தெரிந்துக்கொண்டேன்.வயது ஆகியும், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் எப்படியாவது இந்த மக்களை மேன்மை அடைய வைக்க வேண்டும் என போராடிய பெரியாரின் தொலைநோக்கு பார்வைகளை கண்டு வியக்கிறேன்...இன்னும் நிறைய தகவல் களை தெரிந்துக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் எழுகிறது... நன்றி!
இ.அர்ச்சனா (முதுநிலை கணிதம்),
கும்பகோணம்.
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் திராவிடர் கழக தஞ்சை மண்டலம் இணைந்து நடத்திய பெரியாரியர் பயிற்சி வகுப்பு என்பது எங்களைப் போன்ற மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் பெரிய வேலையைப் பதினைந்து நாட்களுக்குள் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது.
பகுத்தறிவு, தன்மானம், பெண் விடுதலை, இறுகப் பற்றிய ஜாதிய தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை, இட ஒதுக்கீடு, சமூக நீதி, மொழிப்பற்று, எழுத்துச்சீர்திருத்தம், கல்வி, வருவன அறிதல், வருமுன்னுரைத்தல் என்று எத்தனை எத்தனைச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் நம் பெரியார். அவற்றை எல்லாம் இவ்வகுப்பின் மூலம் அறிந் தோம் என்பதே எங்களுக்கு பேருவப்பு.
“புரட்சி என்பது போரில் மட்டும் அல்ல புரிதலிலும் உள்ளது” என்பதை தன் வாழ்நாள் முழுவதும் அழுத்திக் கூறிவிட்டுச் சென்றுள்ளார் பெரியார். அவரை அறிதல் என்பதும் அறத்துள் நுழைதலென்பதும் ஒப்பு.
இந்நேரத்தில் நான் ஹிந்துத்துவ அமைப்பிற்கும் அதன் கிளைகளுக்கும் நன்றியை உரித்தாக்கிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் பெரியார் சிலை உடைத்தல் சாயம் பூசுதல் என்று எங்கள் கண்களுக்கு முதல் முதலாகப் பெரியாரைக் காட்டியவர்கள் அவர்கள் தான். அதன் வழியாகவே பெரியாரைப் படித்துணர்ந்தோம். எனவே அவர்களுக்கும் என் நன்றிகள்.
இன்று தமிழ்நாடென்பது பெரியார் நீங்கின் இல்லையென்பதே உண்மை. அதையெல்லாம் ஒவ்வொரு வகுப்பிலும் கற்றோம் கேட்டோம் என்பதை விட ஒவ்வொன்றையும் உணர்ந்தோம் என்பதே தெளிவு.
மாணவர்களாகிய நாங்களும் மேலெழ வரவேற்புரை, பொன்மொழி, நன்றியுரை என பொறுப்பினை எங்களுக்குக் கொடுத்து, வகுப்பு முடிந்த பின் வினாவெழுப்ப வாய்ப்பும் அளித்து இவ்வகுப்பினை இட்டுச் செலுத்தியது பெரியாரின் பண்பினை உங்களுக்குள் காட்டுகிறது.
இந்த வாய்ப்பு எமக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். ஏற்பாட்டாளர்களுக்கு என் கோடி நன்றி.
பெரியார் வழி நடத்தலையும், பகுத்தறிதலையும், அனைவருக்கும் மதிப்பளித்தலையும், மானங் காத்தலையும் தலைமேற் கொண்டு செயல்படுத்துவேன். இதுவே இவ்வகுப் பிற்கு நான் செய்யும் நன்றிக்கடன்.
நன்றி, வணக்கம்.
பாவலர் தனியெழிலன்,
இளம் பொறியியல் -
கணினி அறிவியல்,
பந்தநல்லூர், கும்பகோணம்.
வணக்கம் அய்யா,
வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்!
மனிதனை நினை, கடவுளை மற
என் பெயர் இர.கீதப்பிரியா, நான் முதுகலை ஆசிரியராக சூனாம்பேடு அரசினர் மேனிலை பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன்.
நான் கடந்த 16 நாட்களாக சேலம் மாவட்டம் சார்பில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வருகின்றேன்.
தந்தை பெரியாரின் சிந்தனைகள் மற்றும் அவர்களின் ஒப்பற்ற பணி களை எனக்கு தெரிந்த வகையில், நான் பாடம் கற்பிக்கும் போதும், நான் பங்கெடுக்கும் அனைத்து நிகழ்வு களிலும், அவர் தான் என் தொடக்கம், அவர் தான் என் நிறைவாக கூட இருப்பார்.
அதனை நான், என் நன்றி கடனாக மட்டும் பார்க்கவில்லை அவற்றை என் முதற்கடமையாகத் தான் பார்க்கின்றேன்.
பெரியாரியல் பயிற்சி வகுப்பில் எனக்கு தெரியாத அதிகமான தகவல்களை அறிந்து கொண்டு அதன் மூலம் மேலும் தெளிவு அடையவும், இந்த பயிற்சி வகுப்பானது எனக்கும், என்னைப் போன்ற இளைய தலை முறைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
அதற்காக உங்களுக்கும், இந்த பயிற்சி வகுப்பினை மிகுந்த கடமையுணர்வுடன் நடத்திக் கொடுத்த அத்தனை ஆசிரியர்கள் மற்றும் இந்த வகுப்பினை ஒருங்கிணைத்த அத்தனை ஒருங்கிணைப்பாளர்கள் அனவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்கள் சிறிதும் தயக்கம் காட்டாமல் இருக்க அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைப்பாளர்கள் செய்து கொடுத்தார்கள். இதில் மிக சிறப் பானது, நேரம் தவறாமை தான். குறித்த நேரத்தில் அத்தனை மாணவர் களையும் ஒருங்கிணைத்து சிறப்பாக வகுப்பினை வழிநடத்தி சென்றதை பார்க்கும் போது, அவர்கள் தந்தை பெரியாரின் மீது வைத்துள்ள பற்றி னைத் தான் நான் பார்த்தேன்.
திராவிடர் இயக்கத்தின் தொடக்கம் முதல் பெண்களுக்கு அடைக்கப்பட்ட அத்தனை உரிமை தடைக்கதவுகளையும் உடைத் தெறிந்தது திராவிடர் கழகமே. இன் னும் கூட தன் கடமையை, நீங்கள் தவறாமல் செய்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.
இன்னும் கூட உரிமைகள் பறிக்கப்பட்ட எங்களுக்காகத் தான் போராடிக் கொண்டிருக்கின்றீர்கள்.
எக்காலத்திற்கும் பெரியாரின் சொல், சிந்தனைகள் மிக வலிமை யானதோ அதே போன்ற உங்களின் செயல்களும் மிக வலிமையானது.
எங்களால் கல்வி கற்க முடி யுமா என்ற எண்ணம் மாறி, எங்க ளாலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்க முடியும் என்ற நிலைமையை உருவாக்கிக் கொடுத்தது திராவிடர் கழகம். தந்தை பெரியார் மற்றும் பெண்களின் உரிமைக்காக ஓயாமல் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் அய்யா, நீங்களும் ஒரு முக்கிய காரணம். இதனை நான் என்றுமே, எங்கேயும் உரக்கத்தான் கூறுவேன், கூறிக்கொண்டுதான் இருப்பேன். இந்த சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கும் வரையில், அய்யா இதே போன்ற அதிகப்படியான பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை முன்னெடுத்து நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதன் மூலமாக மாணவர்கள், நாம் வாழும் சமுதாயத்தில் நிகழும் அத்தனை அடக்குமுறைகளையும் பகுத்தறிவு, சமத்துவம், சுயமரியாதை கொண்டு சரிசெய்ய உதவியாக இருக்கும் அய்யா!
என்னுடைய நீண்ட நாள் கேள்வி,
தந்தை பெரியாரின் தகவல்கள் பற்றி எதுவுமே அதிகப்படியாக பாடப்புத்தகங்களில் இடம் பெறவில்லையே, ஏன்?
அவ்வாறாக இடம்பெறச் செய்தால் அது தொடக்க கல்வியில் இருந்து இடம் பெற வேண்டும்.
தொடக்க கல்வியில் கற்கும் போதே மாணவர்கள் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையை உள்வாங்கிக் கொண்டு அதில் தெளிவு பெற ஒரு வழியாக அமையும்.
பெரியாரின் பிறந்தநாளை அனைத்து பள்ளிகளிலும் முன் னெடுக்க வேண்டும் அதன் மூலமாவது மாணவர்கள் தந்தை பெரியாரின் சிந்தனை கருத்துகளை கேட்கும்போது அவர்களின் மனதில் இருக்கும் சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்ணடிமை போன்றணவற்றில் இருக்கும் சந்தேகங்கள், தெளிவு பெற ஒரு வாய்ப்பாக அமைவும்
என்றும் தந்தை பெரியாரின் வழி யில் வாழ்க பெரியார், வாழ்க தமிழ், வாய்ப்பிற்கு மிக்க நன்றிகள் அய்யா.
- இர.கீதப்பிரியா, சூனாம்பேடு

No comments:
Post a Comment