டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· ஜம்மு காஷ்மீருக்கு மாநில தகுதியை மாநில தேர்தலுக்கு முன்பாக தருவது பற்றி ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
உத்தரபிரதேசத்தில் கோவிட்-19 நெருக்கடியை யோகி தலைமையிலான பாஜக கையாண்டதை கடுமையாக விமர்சித்த ஆளும் பாஜக கட்சி எம்.எல்.ஏ., ராம் இக்பால் சிங், இரண்டாவது அலையின் போது ஒவ்வொரு கிராமத் திலும் குறைந்தது 10 பேர் இறந்ததாகக் கூறியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி பதவியேற்று ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தேசிய ஜன நாயக கூட்டணி அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட அய்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ்:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான எந்தவொரு கூட்டணியிலும் காங்கிரஸ் முழுமை யாய் இருக்க வேண்டும். மக்களவையில் ஆளும் பாஜக வுடன் நேரடியாகப் போட்டியிடும் 200 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜாஷ்வி யாதவ் கூறியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment