நீண்ட கால இழுபறிக்குப்பின் புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவி ஏற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 28, 2021

நீண்ட கால இழுபறிக்குப்பின் புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவி ஏற்பு

அமைச்சர் பதவி கோரும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால் கட்சிக்குள் குழப்பம் நீடிப்பு

புதுச்சேரி,ஜூன்28- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங் கிரஸ் - பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 7ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்ச ராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி இறுதி செய்யப்பட் டது. 

புதிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட் டியலை துணை நிலை ஆளுநர்(பொறுப்பு)  தமிழிசை சவுந்தரராஜ னிடம் முதலமைச்சர் ரங் கசாமி வழங்கினார்.இந்த பட்டியலில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜ.க. நமச்சிவாயம், சாய். சரவண குமார் ஆகியோ ரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த அமைச்சர்கள் பட்டிய லுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து புதிய அமைச்சர்கள் பதவி யேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் நேற்று (27.6.2021) நடைபெற்றது.   நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.சரவணன் குமார் ஆகியோர் அமைச் சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாண மும் செய்து வைத்தார்.

புதிய அமைச்சர் களுக்கு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரி வித்தனர். புதுவையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் அமைச் சராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.அமைச்சரவை பதவியேற்றாலும் பாஜகவை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர் தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று ரங்கசாமியை மிரட்டி வருகின்றனர்.  மேலிடம் வாயிலாக ரங்கசாமிக்கு அழுத்தம் தருகின்றனர் என்கிற தகவல் வெளி யாகியுள்ளது.


No comments:

Post a Comment