குறுஞ்செய்திகள்:28-06-2021 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 28, 2021

குறுஞ்செய்திகள்:28-06-2021

புகார் செய்யலாம்

கல்விக் கட்டணப் புகார்களைத் தெரிவிக்கும் தொலைப்பேசி 14417.

கொள்ளை!

சென்னை உள்பட 21 இடங்களில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளை - அரியானா இளைஞர்கள் கைது.

இன்று முதல்...

இன்று முதல் கரோனா தொற்று குறைந் துள்ள 23 மாவட்டங்களில் அரசுப் பேருந்து, ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன.

எச்சரிக்கை

‘ஆன்லைன்' வகுப்பால் மனச்சோர்வு ஏற்பட்டு தலைமுடியை சாப்பிட்ட விழுப் புரம் பள்ளி மாணவி. (வயிற்றிலிருந்து ஒரு கிலோ கட்டி அகற்றம்).

பள்ளிகள் திறப்பு?

கரோனா பயம் நீங்கினால்தான் பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவிப்பு.

ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை எதிர்த்து சி.பி.அய்., சி.பி.எம்., விடுதலை சிறுத்தைகள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்!

மயில்சாமி அண்ணாதுரை

அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி அளிப்பது குறித்து முதல் அமைச்சரை சந்தித்து கருத்துக் கூறினார் முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.   

ஒலிம்பிக்கில்!

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்க பதக்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளி வென்றால் ரூ.2 கோடி, வெண்கலப் பதக்கம் வென்றால் ரூ.1 கோடி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.   

பாதாள சாக்கடை

50 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் வசிக் கும் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் 

- அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு  


No comments:

Post a Comment