தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.6.2021) தலைமைச் செயலகத்தில், கஜா புயலால் வீடுகளை இழந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மேற்கு பிராந்தியங்கரை, பெரிய கோவில்பத்து மற்றும் கண்ணறிந்தான் கட்டளை ஆகிய கிராம மக்களுக்காக சென்னை, ஒய்.எம்.சி.ஏ. - வால் பிராந்தியங்கரையில் கட்டப்பட்டுள்ள 109 வீடுகள் மற்றும் 1000 பேர் அமரக்கூடிய சமூகநல மண்டபம் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் அடையாளமாக, அவ்வீடுகளுக்கான சாவிகளை 5 குடும்பங்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில், சென்னை - ஒய்.எம்.சி.ஏ. தலைவர் முனைவர் வின்சென்ட் ஜார்ஜ், பொருளாளர் மார்ட்டின் கென்னடி, பொதுச் செயலாளர்
பா. ஆசிர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment