சென்னை,ஜூன்28- சென்னை மாநகரப் பகு தியில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளில் லாரிகள் கழிவுநீர் விடு வதை தடுக்க, அத்தகைய விதிமீறலில் ஈடுபடும் கழிவு நீர் லாரிகளின் உரி மத்தை வட்டார போக் குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத் தில் பரிந்துரை செய் துள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் பசுமை தீர்ப் பாயத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
சென்னை மாநகரப் பகுதியில் லாரிகள் கழிவு நீர் விடுவதைத் தடுக்க, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய 3 கோட்டாட்சியர் களும், காவல்துறையின ருடன் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டுள் ளது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தற் போது 34 கழிவுநீர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
குடிநீர் வாரியத்துக்கு 044 4567 4567 என்ற எண்ணை அழைத்து, நியாயமான கட்டணத் துடன் கூடிய இந்த சேவையை பலரும் பெற்று வருகின்றனர்.
குடிநீர் வாரியம் சார் பில் 6 ஆயிரம், 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கும் வசதி யுடைய 50 கழிவுநீர் லாரிகள் வாங்கப்பட உள்ளன. இந்த நிதி யாண்டி லேயே இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும். வாரியம் சார்பில், சென்னை மாநகராட்சி எல்லையில் தனியார் கழிவுநீர் லாரிகள் பதிவு, இயக்கத்தை ஒழுங்கு படுத்த, வரைவு செய லாக்க நெறிமுறைகள் உருவாக் கப்பட்டு, அதை செயல் படுத்த உரிய அனுமதி பெற அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த செயலாக்க நெறி முறையில், பதிவு செய் யப்பட்ட லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப் பட்டிருக்கும். அதன் மூலம் கழிவுநீர் உறிஞ்சுதல், வெளியேற்றம் ஆகி யவை கண்காணிக்கப் படும். இதன்மூலம் விதி களை மீறி மழைநீர் வடி கால், நீர்நிலைகளில் கழிவுநீர் விடுவதை கட் டுப்படுத்த முடியும்.
மேலும், தேசிய நெடுஞ் சாலைப் பகுதி யில், விதிகளை மீறி கழிவுநீர் விடப் படுகிறதா என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் கண்காணிக்க பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்த வேண்டும். காவல் துறை யினர் உதவியுடன் வட் டார போக்குவரத்து அதிகாரிகள் கண்கா ணிக்க வேண்டும். விதி களை மீறும் கழிவுநீர் லாரிகளின் உரிமத்தை உடனடியாக வட்டார போக்குவரத்து அதிகாரி ரத்து செய்ய வேண்டும். வாகன தகுதிச் சான்றை புதுப்பிக்கும்போது உள் ளாட்சி அமைப்பு களின் தடையில்லா சான் றைக் கட்டாயம் கேட்க அறிவுறுத்த வேண்டும். காவல்துறையினரும் கண்காணித்து உரிய நட வடிக்கை எடுக்க அறிவு றுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment