புதுடில்லி,ஜூன்28- வரும் டிசம் பருக்குள் நாட்டில்உள்ள 18 வய துக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த இலக்கை எட்டுவதற்கு 188 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து தேவைப்படும். தற்போதைய நில வரப்படி 5.6 சதவீத மக்களுக்கே இரண்டு தவணை தடுப்பூசி போடப் பட்டுள்ள நிலையில் அனைவருக் கும் தடுப்பூசி போடுவது தொடர்பாக ஒன்றிய அரசின் அறிக்கை உச் சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. நாட்டில் 18 வயதுக்கு அதிகமானோர் எண்ணிக்கை 93 கோடி முதல் 94 கோடி வரையாகும். அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி போட 186 கோடி முதல் 188 கோடி தடுப்பூசி தேவைப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மனோகர் அக்னானி தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் 51.6 கோடி டோஸ்கள்தான் தயாரிக்க முடியும். எஞ்சிய 135 கோடி மருந்துகளை வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த நிறுவனத்திடமிருந்து எவ்வளவு மருந்து வாங்கப்படுகிறது என்று மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
ரஷ்யாவைச் சேர்ந்த மெசர்ஸ் கமலேயா இன்ஸ்டிடியூட் நிறு வனம் தயாரிக்கும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்காக கடந்த ஏப்ரல் மாதம் அனுமதிக்கப் பட்டது. தற்போது இந்த தடுப்பூசி போடவும் அனுமதி வழங்கப்பட் டுள்ளது.
இது தவிர பயலாஜிகல்-இ மற்றும் ஜைடஸ் காடிலா நிறு வனம் தடுப்பூசி பரிசோதனையில் உள்ளது. இந்த தடுப்பூசிகளும் மருத்துவ அனுமதிக்கு விண்ணப் பிக்கும். ஜைடஸ் காடிலா நிறுவ னம் 12வயது முதல் 18 வயதுப் பிரிவினருக்கான தடுப்பூசி உருவாக் கத்தில் ஈடுபட்டுள்ளது. இது விரை வில் விற்பனைக்கு வரும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவரும் தடுப்பூசியை நேரடியாக சென்று எளிதாக போட்டுக் கொள்ளும் வசதி உருவாக்கப்படும். டிஜிட்டல் மூலமாக பதிவு செய்வது போன்ற பிரச்சினை தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பெரும் பிரச்சினையாக இருக்காது என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 31கோடி டோஸ் தடுப்பூசி மருந்துகள் போடப் பட்டுள்ளன. கிராமப் பகுதிகளில் உள்ளவர்கள் கோவின் தளத்தில் பதிவு செய்யாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று போட்டுக் கொள்ள வசதி ஏற்படுத் தப்படும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment