சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு முன் மாதிரி மாநிலமாக திகழ்வதாகவும், மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முதல்-அமைச் சரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ஜான் ட்ரீஸ் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பொருளாதார ஆலோசனை குழு
தமிழ்நாட்டின் பொருளாதா ரத்தை மேம்படுத்த முதல்-அமைச்ச ருக்கான பொருளாதார ஆலோ சனை குழு உருவாக்கப்பட்டு உள் ளது. இந்த குழுவில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளா தார ஆலோசகர் அரவிந்த் சுப்பிர மணியன், டில்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஜான் ட்ரீஸ், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஜான் ட்ரீஸ், பெல்ஜியம் நாட்டில் பிறந்தவர். இந்திய குடியுரிமை பெற்று கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கிறார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, அவரது பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினராக இருந்தார். 100 நாள் வேலை திட்டம் மற்றும் தகவல் உரிமை சட்டம் போன்ற திட்டங் களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர்.
பொருளாதார துறையில் உலக அளவில் நன்கு அறியப்பட்ட ஜான் ட்ரீஸ், ராஞ்சி நகரில் உள்ள குடிசை பகுதியில்தான் வசித்து வருகிறார். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியாசென்னுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்.தற்போது டில்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்சில் கவுரவ விரிவுரையாளராக உள் ளார்.இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற் றுள்ள அவர், சிறப்பு பேட்டி அளித்தார். ஜான் ட்ரீசிடம் கேட் கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- முதல்-அமைச்சருக் கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினரானதை எப்படி உணர்கிறீர்கள்?
பதில்:- தமிழ்நாட்டின் பொரு ளாதாரம் குறித்து எனக்கு போதிய அறிவு இல்லாவிட்டாலும், நான் இந்த வேலையை சில தயக்கங் களுடன் ஏற்றுக்கொண்டேன். ஒரு ஆண்டு காலத்திற்கு உறுப்பினராக சேர ஒப்புக்கொண்டேன். அதன் பிறகு அதனை தொடர நல்ல காரணங்கள் இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆலோசனை குழு உறுப்பினராக ஆனதன் மூலம் எனது கற்றல் அனுபவத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் நிச்சயம் செய்வேன்.
கண் திறக்கும் அனுபவம்
கேள்வி:- இதற்கு முன்பு நீங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்களா?
பதில்:- நான் 3 அல்லது 4 முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறேன். ஒரு முறை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் தமிழ் நண்பர் ஒருவருடன் இணைந்து சில நாட்கள் சைக்கிளில் வலம் வந்தேன். எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வட இந்தியாவில் கழித்த எனக்கு, இது மற்றொரு கண் திறக்கும் அனுபவமாக இருந்தது. இன்னொரு முறை விழுப்புரத்திற்கு வந்தேன். அங்கு 100 நாள் வேலை திட்டம் குறித்த படைப்புகளின் சமூக தணிக்கையில் கலந்து கொண்டேன். தமிழ்நாட் டில் உள்ள கிராமப்புற மாணவர் கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து சில கள ஆய்வுகளையும் மேற்கொண்டோம்.
தமிழ் பெண்களின் தன்னம்பிக்கை
கேள்வி:- தமிழ் மக்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?
பதில்:- குறுகிய கால பயணம் என்றாலும், தமிழ்நாட்டில் உள்ள பல விடயங்கள் என்னை கவர்ந்தன. உதாரணமாக, வட இந்திய மாநி லங்களை விட தமிழ்நாடு மிகச் சிறந்த பொது சேவைகளை கொண் டுள்ளது. கலகலப்பான பள்ளிகள், அங்கன்வாடி மய்யம் மற்றும் சுகாதார மய்யங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த சேவைகளை பற்றி தமிழக மக்கள் நிறைய புகார் கூறுகிறார்கள். ஆனால் இந்த புகார்கள் அனைத்தும் அதன் சேவையை மேம்படுத்துவதற்காகத் தான்.தமிழ் பெண்களின் தன்னம் பிக்கை என்னை மிகவும் ஈர்த்தது.
16 சதவீத குடும்பங்கள்
கேள்வி:- தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- தமிழ்நாட்டின் வாழ்க் கைத் தரம் பல மாநிலங்களை விட சிறந்தது, இருந்தாலும் தமிழ்நாட் டில் குறிப்பாக கிராமப்புறங்களில் இன்னும் ஏழை மக்கள் உள்ளனர். 2011-2012ஆம் ஆண்டு திட்டக் குழு வின் அறிக்கையின்படி கிரா மப்புற தமிழ்நாட்டில் 16 சதவீத குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளன. திட்டக் குழுவின் ஓட்டுமொத்த சதவீதத்தில், தமிழ் நாட்டின் வறுமைக்கோடு சதவீதம் மிகக்குறைவு தான்.மேலும் தமிழ் நாடு நன்கு வளர்ந்த மாநிலம். எனவே இங்கு அனைவரையும் தீவிர வறுமையில் இருந்து பாது காக்க முடியும்.
தமிழ்நாடு முன்னோடி
கேள்வி:- தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து அறிந்திருக்கிறீர்களா?
பதில்:- மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம் பாட்டுத் திட்டம் (அய்.சி.டி.எஸ்), பொது வினியோக முறை மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள் உள்பட பல திட்டங்களை அறிந் திருக்கிறேன். இதனை காண இன் னும் நான் ஆர்வமாக இருக்கிறேன். இதுபோன்ற திட்டங்களுக்கு இந் தியாவிலேயே தமிழ்நாடு முன்னோ டியாக இருந்து வருகிறது. பள்ளி யில் வழங்கப்படும் சத்துணவு திட் டத்தை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அறிந்து இருக்கின்றன. சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சி வரலாற் றில் மிக முக்கியமானது.
மற்ற மாநிலங்கள்...
கேள்வி:- இந்தியாவின் வளர்ச்சி யில் தமிழ்நாட்டின் பங்கு என்ன?
பதில்:- தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம். குறிப்பாக குழந்தை வளர்ச்சி, சுகாதார பாது காப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களில் இருந்து அதிக விட யங்களை கற்றுக்கொள்ள வேண் டும். அதேபோல் சேவை துறையி லும், உற்பத்தியிலும் தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார தலை வனாக மாறி உள்ளது.சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் ஏழ் மையான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடும் இருந்தது. ஆனால் இப்போது தமிழ்நாட்டின் வளர்ச் சியை காணும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்
தமிழ்நாட்டின் மனித வளம் என நான் நினைக்கிறேன். ஏழை மக்களுக்கான கல்வியின் மூலம் கல்வியின் தரம் இங்கு உயர்ந்து இருக்கிறது.
அடக்குமுறை
கேள்வி:- தமிழ்நாடு பற்றிய உங் களது மதிப்பீடு என்ன?
பதில்:- கேரளா மற்றும் இலங் கையுடன் சேர்ந்து தமிழ்நாடு பல வழிகளில் இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பது அர்த் தமல்ல. மிகப்பெரிய ஊழல்கள்,
ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறிப் பிட்ட பிரிவினர் மீதான அடக்கு முறை போன்ற பல பிரச்சினைகள் இன்னும் நீடித்து வருகிறது. என் னைப் பொறுத்தவரை சமூக கொள்கை போன்ற தமிழ்நாட்டின் பாராட்டப்பட்ட துறைகளில் கூட, அது இன்னும் கேரளா மற் றும் இலங்கைக்கு பின்னால்தான் உள்ளது.
கேள்வி:- எப்போது தமிழ்நாட் டிற்கு வருவீர்கள்?
பதில்:- விரைவில் வருவேன் என்று எண்ணுகிறேன்.
இவ்வாறு ஜான் ட்ரீஸ் கூறினார்.

No comments:
Post a Comment