பணி ஓய்வு பாராட்டு - ‘வாழ்வியல் சிந்தனைகள்' நூல் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 28, 2021

பணி ஓய்வு பாராட்டு - ‘வாழ்வியல் சிந்தனைகள்' நூல் வழங்கல்

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கத் துணைத் தலைவர்  கோ.குமாரி 38 ஆண்டுகள் மறைமலை நகர் 'கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புரோ டக்ட்'   தொழிற்சாலையில் பணியாற்றி 12.6.2021ஆம் நாள் பணி ஓய்வு பெற்றார். 

பணி ஓய்வு பாராட்டு நிகழ்ச்சி 12.6.2021 பிற்பகல் 3.00 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில் தொழிற்சாலை மேலாளர் எ.பாலமுருகன் தலை மையில் நடைபெற்றது. உயர்நிலை அலுவலர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பாராட் டினர். தொழிற்சங்கம் சார்பில் கோ.குமாரியை பாராட்டி சால்வை அணிவித்து கேடயம் வழங்கப் பட்டது.  சங்க தலைவர் த.ரமேஷ், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி,  பி.தங்கமணி ஆகியோர் சிறப்பு செய்தனர். தொழிற்சாலை அலுவலர்கள் மற்றும் சாரா லீ டிடிகே தொழிலாளர் நல சங்க பொறுப் பாளர்களும் தொழிலாளர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்து பாராட்டி வழியனுப்பிவைத்தனர். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 'வாழ் வியல் சிந்தனைகள்' நூல் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment