சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் மானமிகு வி.பி.சிங் அவர்களது பிறந்த நாள் இன்று!
சமூகநீதிக் கொள்கைக்காக - மண்டல் பரிந்துரை களை செயலாக்கியதினால், தனது ஆட்சியை - பிரதமர் பதவியை 10 மாதங்களுக்குள் இழந்தபோதும், மனங்கலங்காத மாவீரராய், சமூகநீதிக்காக இன்னும் எத்தனை முறைவேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயார் என்பதைப் பிரகடனப்படுத்தி, வரலாற்றில் எவரும் எட்ட முடியாத உயரத்தில் நிற்பவர் வி.பி.சிங்!
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எப்போதும் ஆதரவுக்கரம் நீட்டி, தமிழ் நாட்டில் பிறக்காது பிறந்த பெம்மான்!
அவர் சமூகநீதியின் சரித்திர நாயகர்!
அரசியலில் சமூகநீதிப் போராட்ட கலங்கரை வெளிச்சம் அவர்!
வாழ்க! வாழ்க!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
25.6.2021

No comments:
Post a Comment