சென்னை, விழுப்புரம். கடலூர், புதுச்சேரி - அரியலூர் மண்டலங்களில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 27, 2021

சென்னை, விழுப்புரம். கடலூர், புதுச்சேரி - அரியலூர் மண்டலங்களில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா

பெரியார் தான் வழிகாட்டி: பல வழிகாட்டிகள் இருந்தால் திசை மாறிவிடுவோம்

*  10 வயதுச் சிறுவனாக மேடையேறி ஜூன் 27 இல் 78 ஆம் ஆண்டை நிறைவு செய்கிறேன்

பெரியார்- அம்பேத்கர் இயக்கங்களுக்கிடையே சிண்டு முடிவோருக்கு பதில் சொல்லாதது தான் பதில்கேள்வியும் - கிளத்தலும் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் பதில்கள்

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல் கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் 5 மண்டல திராவிடர் கழகம் சார் பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி நிறைவு விழாவில் கழக அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார்.

கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் இணைப்புரை வழங்கினார்.

 திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், புதுச்சேரி மாநி லத் தலைவர் சிவ.வீரமணி, சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், கடலூர் மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், செயலாளர் தாமோதரன், விழுப்புரம் மண்டல தலைவர் .மு.தாஸ், செயலாளர் குழ.செல்வராசு, அரிய லூர் மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், செயலா ளர் மணிவண்ணன், புதுச்சேரி மண்டல தலைவர் சடகோபன், செயலாளர் அறிவழகன், மாவட்ட தலைவர்கள் தாம்பரம் முத்தையன், வழக்குரை ஞர் குமாரதேவன்வில்வநாதன், மோகன், விடு தலை நீலமேகம், ஆனந்தன், .சுப்பராயன், பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், .சுப்பராயன், தண்டபாணி, இளங்கோவன், தங்கராசு. மாவட்டச் செயலாளர்கள் கணேசன், பார்த்த சாரதி, பாலு, ஜெயராமன், நாத்திகன், இளவரசன், ரமேஷ், பரணிதரன், பாஸ்கர், பரந்தாமன், சிவக் குமார், சித்தார்த்தன், வெற்றிச்செல்வன், சிந்த னைச் செல்வன், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 அறிக்கை வாசித்தல்

கடலூர் மண்டல பயிற்சி முகாம் ஒருங்கி ணைப்பாளர், மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன், சென்னை மண்டல ஒருங்கி ணைப்பாளர், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் பிரவின்குமார், விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர், கல்லக்குறிச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பகவான்தாஸ், புதுச் சேரி மண்டல ஒருங்கிணைப்பாளர்,புதுச்சேரி இளைஞரணித் தலைவர் தி.இராசா, அரியலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.அறிவன் ஆகியோர் பயிற்சி முகாம் குறித்த அறிக்கை வாசித்தனர்.

பெரியார் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்குவோம்: முனைவர் துரை.சந்திரசேகரன்

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமை ஏற்று பேசினார். அப் போது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதல்படி காணொலி வழியாக உறவாடக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். கரோனா காலகட்டத்தில் புதிய நடவடிக்கைகள் மூலம் 100-க்கும் மேற்பட்ட காணொலிக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அனைத்து அணிகளு டன் நமது தலைவர் பேசி வருகிறார். அவர்களின் நலன்களை அறிந்து கொள்கிறார்.

தஞ்சை முன்னுதாரணம்

தஞ்சையில் இளைஞரணித் தோழர்களும், பெரியார் பூபதி படிப்பகமும் இணைந்து நடத்திய பெரியாரியல் பயிற்சி முகாமை முன்மாதிரியாகக் கொண்டு தலைவர் அவர்கள் தமிழகம் முழுவ தும் பயிற்சிப் பட்டறைகளை நடத்த வேண்டு மென அறிவித்தார். அதன்படி, பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந் தனை உயராய்வு மய்யமும், நமது தோழர்களும் இணைந்து வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள்.

நல்லத் தொடக்கம்

பயிற்சி முகாம் புதிய இளைஞர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. பெரியாரின் இலட்சியங்கள் சென்று சேர்ந்திருக்கிறது. இதிலே இணையம் உள்ளிட்ட சிக்கல்களை சந்தித்தோம். இருப்பினும் நல்லத் தொடக்கம். இது போன்ற பயிற்சி முகாம்களை மகளிரணிக்கும் அவர்களே முன்னின்று நடத்த வேண்டும்.

எனவே, பெரியார் காண விரும்பிய சமுதா யத்தை உருவாக்க இளைஞர்களே, மாணவர் களே வாரீர் எனப் பேசினார்.

திராவிட நாற்றுகளின் நறுமணம்

அறியாமை இருளில் வெளிச்சம் பாய்ச்சிய வகுப்பு

சென்னை மண்டலம் சூரியா காண்டீபன் (ராணிப்பேட்டை):  அறியாமை இருளில் வெளிச் சம் பாய்ச்சிய ஒளி விளக்காக பெரியாரியல் பயிற்சி வகுப்பு இருந்தது. பெரியாரை அறிந்து கொண்டதைவிட நன்றாகப் புரிந்து கொண்டேன். பெரியாரின் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சமத்துவ வழியில் வாழ்ந்துகாட்டி, பெரியாரின் சிந்தனைகளை பலரிடம் பரப்பு வேன் என்றார்.

பெரியாரியலே வாழ்க்கை நெறி

விழுப்புரம் மண்டலம் சங்கீதா (பெரிய ஒடப்பன் குப்பம்): தாயின் அன்பையும், தந்தை யின் அரவணைப்பையும் இழந்த நான் மனதள வில் பாதிக்கப்பட்டு இருந்தேன். இந்த பெரியாரி யல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து அதன் மூலம் வாழ்க்கையில் தெளிவான சிந்தனையை பெற் றேன். என் மீது முழுமையான நம்பிக்கையை பெறுவதற்கு இந்த பயிற்சி வகுப்பு காரணமாக அமைந்திருக்கிறது.

பெரியாரின் சிந்தனைகளை என்னால் இயன்ற அளவு அனைவரிடத்திலும் பரப்புவேன். மனிதத் தன்மையோடு பாடுபட இதன் மூலம் உறுதி ஏற்கிறேன் என்றார்.

பெண்கள் எல்லா வாய்ப்புகளையும் பெற்றனர்

கடலூர் மண்டலம் யாழினி (மழவராய நல்லூர்):  தந்தை பெரியாரின் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு பெண் விடுதலை, சமத்துவம் உள்ளிட்ட அனைத்து கருத்துகளையும் தெரிந்துகொண் டேன்பெண்கள் அனைத்து துறையிலும் எல்லா வாய்ப்புகளையும் பெற்றதற்கு காரணம் தந்தை பெரியாரின் உழைப்பு தான்.

 தந்தை பெரியாரின் கொள்கைகளை மக் களிடம் கொண்டு சேர்ப்பேன். இந்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.

பெரியாரின் பெயரப்பிள்ளைகளாக பயணிப்போம்

புதுவை மண்டலம் சிபிசரண் (சேத்துப்பட்டு): பெரியார் குறித்த தெளிவினை பெற்றோம். சினிமா உள்ளிட்ட கவர்ச்சிகளின் பக்கம் செல்லா மல், பெரியாரின் பக்கம் இந்த பயிற்சி முகாம் எங்களை திசைதிருப்பியது. இதற்கு வாய்ப் பளித்த அனைவருக்கும் நன்றி.

 ஜாதி என்பது கற்பனை. ஜாதியவாதத்துக்கு எதிராக தந்தை பெரியாரின் பேரன்களாக, பேத்திகளாகப் பயணிப்போம். ஆசிரியர் அய்யா வழிகாட்டுதல் படி நடப்போம் என்றார்.

பெரியாரியல் வாழ்க்கைப் பாடம்

அரியலூர் மண்டலம் இளந்தென்றல்  (வீராக் கன்):  பெரியாரியல் பயிற்சி வகுப்பு சிறப்பாக இருந்தது. இதில் பெண் உரிமைகளைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். பெரியாரின் பெண் விடுதலையை கருத்துகளாக மட்டுமில்லாது, வாழ்க்கை நெறியாக மாற்றிக் கொண்டு வாழ் வேன் என்றார்.

மனித நேயமே மய்யப்புள்ளிபேராசிரியர் நம் .சீனிவாசன்

பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்கு நர் பேராசிரியர் நம்.சீனிவாசன் அறிமுக உரை யாற்றும்போதுதந்தை பெரியாரின் கொள்கை யில் மய்யப்புள்ளியாக விளங்குவது மனிதநேயம் ஆகும். அடுத்தவர் துயரினை தன் துயராகக் கருதினால், அது தான் இப்பயிற்சி முகாமின் வெற்றி .

மாணவ மாணவிகள் புத்தக வாசிப்பை விரி வாக்க வேண்டும். அதற்காக இப்பயிற்சி வகுப் பில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 50 சதவீத கழிவுகளுடன் பெரியார் புத்தக நிலையம் சார் பில் புத்தகங்கள் வழங்க வேண்டுமென ஆசிரி யர் அய்யா அவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே, மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

71 சதவிகிதம் பேர் இயக்கம் சாராதவர்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்

கழகப் பொதுச் செயலர் வீ.அன்புராஜ் உரை யாற்றும் போதுபெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், மண்டல திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்று வரும் பெரியாரியல் பயிற்சி முகாம்களில் தமிழ்நாடு முழுவதும் 1434 பேர் பதிவு செய்துள்ளனர்இதில் பெண்கள் 490 பேர், ஆண்கள் 944 பேர். இம்மாணவர்களில் இயக்கம் சார்ந்தவர்கள் 429 பேர். இயக்கத்தைச் சாராத வர்கள் 1005 பேர்.

இதில் சென்னை, கடலூர், விழுப்புரம், புதுச் சேரி மற்றும் அரியலூர்  மண்டலங்களில் 370 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 114 பேர் பெண்கள்,  256 பேர் ஆண்கள். இயக்க குடும் பத்துப் பிள்ளைகள் 109. இயக்க குடும்பத்தைச் சாராதவர்கள் 261 பேர். இப்படி 71% பேர் இயக் கத்தை சாராத குடும்பத்து மாணவர்கள் தந்தை பெரியாரின் கருத்துகளை கேட்டு அறிந்துள்ளனர்.

 தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மாணவர்களால் முழுமையாக பங்கேற்க முடிய வில்லை அவர்களுக்காக ஜூலை 4ஆம் தேதி தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் அளிக்கப் படும்.

சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் சென்னையில் ஒரு மாணவரும், விழுப்புரத்தில் இரண்டு மாண வர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள் ளனர். இவர்களில் யாரும் கழக குடும்பத்தவர்கள் இல்லை என்பது சிறப்புக்குரியது.

பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்கள் நண்பர்கள், உறவி னர்களிடம் எடுத்துச்சொல்லி அடுத்தடுத்து நடை பெறக்கூடிய பெரியாரியல் பயிற்சி வகுப்பில் அனைவரையும் பங்கேற்க செய்ய வேண்டும் எனக் கூறினார்.

ஆசிரியருடன் கேள்வியும் - கிளத்தலும்:

பயிற்சி மாணவர்கள் எழுப்பிய வினாக்க ளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவர்களுக்கு புரியும் வண்ணம் பதிலளித் தார்.

பதிலே சொல்லாதது தான் பதில்

 கடலூர் மண்டலம் நெய்வேலியை சேர்ந்த ரேவந்த் ஆண்டனிபெரியார் இயக்கங்கள் மற்றும் சார்பு இயக்கங்களிடையே ஏற்படும் முரண், இந்த இயக்கங்கள் இடையே சிண்டு முடிவோர் பற்றி அய்யா உங்களுடைய கருத்து என்ன.

ஆசிரியர் பதில்: சிண்டு முடிப்பவர்கள் இடம் தெரியாமல் போவார்கள். அவர்களுக்கு, பதிலே சொல்லாதது தான் பதில். காலம் பதில் சொல்லும்.

மேடையேறி 78 ஆண்டுகள்:

 அரியலூர் ஓவியாஅய்யா தாங்கள் எட்டு வயதில் மேடையேறியதாகக் கூறுகிறார்கள். இந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

ஆசிரியர் பதில்: ‘அய்யாவின் அடிச்சுவட்டில்' என்ற புத்தகத்தில் இதற்கான விரிவான பதில் இருக்கிறது.  1943ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி  என்னுடைய 10 வயதில் மேடை ஏறி உரை யாற்றினேன். அதன் 78 ஆம் ஆண்டு ஜூன் 27 - 2021 நாளை மாலை நடைபெற இருக்கிறது.

  நாடக வசனம் பேசி 2ஆம் வகுப்பு  படிக்கும் போதே பரிசு வாங்கியிருக்கிறேன். எங்கள் ஆசிரியர் திராவிடமணி கல்வியோடு, கொள்கை யையும் சேர்த்து போதித்தார்.

கடலூரில் நடைபெற்றதிராவிட நாடு' ஏட் டிற்கு நிதி கொடுத்த கூட்டத்தில் அண்ணா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் 10 வயதில் மேடையேறி பேசினேன். 8 வயதில் அல்ல.

 முதலில் இரண்டு, மூன்று முறை மனப்பாடம் செய்து பேசினேன். பின்னர் நானே பேசத் தொடங்கிவிட்டேன். அப்போது, 10 வயது பகுத்தறிவுச் சிறுவன் உரையாற்றுவார் எனக் குறிப்பிடுவார்கள்.

இப்படி என்னைச் செதுக்கியவர்கள் பெரியா ரும், என் ஆசிரியர்களும் தான் என்றார்.

ஒரே வழிகாட்டி தான்

மாணவர் வர்ஷினி: பெரியாரைத் தவிர வேறு யார் உங்களின் வழிகாட்டி?

ஆசிரியர் பதில்: பெரியார் ஒருவர் தான் வழிகாட்டி. ஒரே வழிகாட்டி தான் நமக்கு இருக்க வேண்டும். இரண்டு வழிகாட்டி இருந்தால் செல்லும் திசை மாறிவிடும்.

திருந்து - திருத்து:

பாடாலூர் ராகவி: மனிதநேயம், சுயமரியா தையை தந்தை பெரியார் போற்றினார் பெரி யாரை நான் பார்த்ததில்லை ஆனால் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றும் கூட ஜாதியை குறித்து கேட்டு காவல்துறையினரே அடிக்கும் இழிவான நிலை உள்ளதே, இதற்கு உங்கள் பதில் என்ன?

ஆசிரியர் பதில்: பயிற்சி பெற்ற மாணவர் களுக்கு நிறைய பணி இருக்கிறது. நாம் திருந்து வது மட்டுமல்ல, அனைவரையும் திருத்த வேண் டும். 5000 ஆண்டுகால நோய் இதனை சீர்படுத்த வேண்டும்.

இன்று ஜாதியை கேட்டு அடிப்பவர்கள், அவர்கள் அடிபட்டால் மருத்துவரிடம் சென்று நீங்கள் என்ன ஜாதி என்று கேட்பார்களா என்று அவரிடம் நாம் கேட்கவேண்டும்.

உங்கள்பணி எதிர்கால பணி. பெரியார் என்றும் தேவைப்படுகிறார் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

தற்காப்புக் கலை பயிற்சி

சென்னை ஆஷிகா சாய்: பெண்களுக்கு பாதுகாப்பான நிலை இல்லை. கழகம் சார்பில் மகளிர் தற்காப்பு பயிற்சி ஏற்படுத்தித் தருவீர் களா? 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பெரியார் குறித்த கருத்தில் மாற்றம் செய்யப்படுமா?

ஆசிரியர் பதில்: கழக மகளிர் அணி சார்பில் தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது அது விரி வாக்கப்படும். கரோனா முடிந்தபின்பு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படும்.

பாடத்திட்டம் குறித்து கேட்டீர்கள், புதிய அரசு குறைபாடுகளைப் போக்கும். அதற்கான பணிகளை செய்து வருகிறோம்.

பெரியாருக்கு சம்பவங்கள்தான் வழிகாட்டி

சென்னை அனன்யா: பெரியாருக்கு யார் வழிகாட்டிகள்?

ஆசிரியர் பதில்: பெரியாருக்கு அவர் வாழ் வில் நடந்த சம்பவங்கள் தான் வழிகாட்டி.

குடும்பத்தின் சார்பில் உங்களுக்குத் தடை ஏற்பட்டதா?

மேச்சேரி சிபிசரண்: நாங்கள் பெரியார் கொள்கை குறித்து பேசும்போது எங்கள் குடும் பத்தில் கண்டிக்கிறார்கள். அதுபோன்று அய்யா நீங்கள் கொள்கையை பேசும்போது உங்கள் குடும்பத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டதா?

ஆசிரியர் பதில்: கொள்கை பற்றி பேசத் தொடங்கிய பிறகு ஒழுக்கத்தின் காரணமாக, நாணயத்தின் காரணமாக அனுமதித்தார்கள். உங்கள் குடும்பத்தில் பெரியாரின் கருத்துகளை, கொள்கையின்  நியாயங்களை நிதானமாக எடுத் துச்சொல்லுங்கள். பிறகு அனுமதிப்பார்கள்.

ஆரிய பெண்களும் சூத்திரர்களே!

கடலூர் தேவன்ராஜா: ஆரியர்கள் ஜாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கிறார்கள். ஆரி யர்கள் வரும்போது பெண்களோடு வந்தார்களா?

ஆசிரியர் பதில்: இந்து மதம் எங்கே போகிறது என்கிற நூலில் அக்னி ஹோத்திரம் தாத்தாச் சாரியார் தெளிவாக எழுதி இருக்கிறார். திராவிடர் கழக பதிப்பாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருகின்ற போது குறைந்த பெண்களோடு தான் வந்தார்கள். நம் பெண்களோடு கலந்தார்கள். அதனால் தான் பெண்களை சூத்திரர்கள் என்கிறார்கள்.

திருக்குறள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத நூலா?

சென்னை பவதாரணி: திருக்குறள் பகுத் தறிவுக்கு ஒவ்வாத நூல் என்று பெரியார் சொன் னதாகக் கூறப்படுகிறது - உண்மையா?

 ஆசிரியர் பதில்: இது முற்றிலும் தவறான பிரச்சாரம் ஆகும். திருக்குறள் மாநாடு நடத்தி புலவர்கள் வீட்டு அலமாரியில் இருந்த திருக் குறளை தமிழ்நாட்டில் தெருக்களில் பரப்பியவர் தந்தை பெரியார்.

பெரியார்-மணியம்மை திருமணம்

பாளையங்கோட்டை சின்னப்பராஜ்: பெரியார் முதுமையான காலத்தில் இளம் வயதான மணி யம்மையாரை திருமணம் செய்து கொண்டார் என்றும், இதனால் அண்ணா பிரிந்து சென்றார் என்றும் கூறப்படுகிறதே. இதன் உண்மை நிலை என்ன?

ஆசிரியர் பதில்: “பெரியார்-மணியம்மை திருமண வரலாறுஎன்ற புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். அதில் முழுமையாக இது குறித்த கருத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன. பெரியார்-மணியம்மை திருமணம் என்பது இயக்கத்தைப் பாதுகாப்பதற்கான, பெரியாரின் சொத்துக்களை இயக்க பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான ஓர் ஏற்பாடு ஆகும்.

 அரசியல் கட்சி தொடங்குவதில் ஆர்வம் கொண்ட அண்ணா பெரியார்-மணியம்மை திரு மணம் குறித்து விமர்சனம் செய்திருந்தாலும், பின்னாளில் அதற்கான வருத்தங்களை தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு கழகத் தலைவர் பயிற்சி மாணாக் கர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார்.

கூட்டத்தில் மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் ஈரோடு சண்முகம், ஊமை ஜெயராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் மதிவதனி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டியன் உள்பட மாநில மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

 நிறைவாக விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் தா.இளம்பரிதி நன்றி கூறினார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முக்கிய அறிவிப்பு

பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவ மாணவிகளிடையே பெரியார் குறித்த தேடலை அதிகரிக்க பெரியார் புத்தக நிலையம் சார்பில் 50% கழிவில் புத்தகங்கள் வழங்கப்படும் என தமிழர் தலைவர் ஆசிரியர் தெரிவித்தார்.

மேலும், மாணவி  ஓவியாவுக்கு அய்யாவின் அடிச்சுவட்டில் என்கிற புத்தகத்தையும், கடலூர் மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் சின்னப்பராஜிக்கு பெரியார் மணியம்மை திருமண வரலாறு புத்தகத்தையும், கடலூர் தேவன் ராஜாவுக்கு அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்கிற நூலையும் தமதுசொந்த செலவில் அனுப்பி வைக்கப்படும் எனக்கூறினார்.

பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகள் தொடர்ந்து பெரியாரியலைப்பரப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொகுப்பு: .சீ.இளந்திரையன்


No comments:

Post a Comment