கடந்த கால ஆட்சியில் தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டது எப்படி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

கடந்த கால ஆட்சியில் தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டது எப்படி?

விரைவில் வெள்ளை அறிக்கை!

முதலமைச்சர் உத்தரவையேற்று ஆய்வு நடவடிக்கை!

தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

சென்னை , ஜூன் 25- தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வெளி மாநிலத் தவர்களுக்கு எத்தகைய வழி முறை களில் பணி வாய்ப்புகள் வழங்கப் பட்டன என்பது குறித்து ஆய்வு செய்து, அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், ஆளுநர் உரைமீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உறுப்பினர் தி.வேல்முருகன், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுவது எப்படி? என வினா எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்து நிதி அமைச் சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டதாவது:- உறுப்பினர் முதலில் கூறியதற்கு ஒரு விளக்கம். முதலமைச்சர் அவர்கள், மனித வள மேலாண்மைத் துறை என்று அந்தத் தலைப்பை மாற்றி, முன்னர் (Personnel and Administrative Reforms)என்று இருந்த அந்தத் துறையில், ஓர் ஆய்வை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கடைசி 7 ஆண்டுகளில் அல்லது 10 ஆண்டுகளில் எந்தெந்த அரசாணை யின் அடிப்படையில், எந்தெந்த சட்டத்தின் அடிப்படையில், எந்தவித எந்தெந்த பொது நிறுவனங்களின் திட்டங்களின் அடிப்படையில் மாற்றத் தினால் தமிழர்களைத் தவிர வேறு மாநிலத்தைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு அல்லது நபர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது, அது எந்த அரசா ணையின்கீழ் வந்தது, அது எப்படி ஆர்டர் ஆகி வந்தது, எந்த விதிமுறை மாற்றத்தால் வந்தது என்பதை முழுமையாக ஆய்வு செய்து, அப்படியிருப்பின் அதை முற்றிலும் மாற்றி இனிமேல் அதைத் தவிர்ப்பதற்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி அதைச் செய்யவிருக் கிறோம். இரண்டாவது, விரைவில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவிருக் கிறோம். உறுப்பினரிடம் என்னென்ன தகவல் இருக்கிறதோ, என்னென்ன கோப்பு இருக்கிறதோ, அனைத்தையும் என்னிடம் கொடுக்குமாறு நான் பேர வைத் தலைவர் அவர்களின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன். அவை அனைத் தையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment