'நீட்' வேண்டாம்; 2007இல் கலைஞர் ஆட்சி நடைமுறைப்படி மாணவர் சேர்க்கை வேண்டும் நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிடம் மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

'நீட்' வேண்டாம்; 2007இல் கலைஞர் ஆட்சி நடைமுறைப்படி மாணவர் சேர்க்கை வேண்டும் நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிடம் மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் மனு

புதுடில்லி, ஜூன் 25  மாநிலங்களவை தி.மு.. உறுப்பினர் மூத்த வழக் குரைஞர் பி.வில்சன், நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய நீதியரசர் ஏகே ராஜன் கமிட்டியிடம் கொடுத்த மனுவின் சுருக்கம்

ஒன்றிய அரசால், மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அறிமுகப்படுத்தப் பட்ட 'நீட்' எனும் நுழைவுத் தேர் வினால் கடந்த நான்கு வருடங் களாக, தமிழகத்தை சார்ந்த, குறிப்பாக சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கிய மாணவ, மாணவியர்களின் மருத்துவக்கல்வி கனவும் - நம்பிக் கையும் சிதைக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, பன்னிரண் டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளைத் தவிர்த்து தேவையின்றி திணிக்கப் பட்ட இந்த 'நீட்' எனும் கூடுதல் தேர்வு காரணமாக, சமூக  மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களில் உள்ள மாணவ மாணவியர்கள் மனச் சோர்வுக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கப் படுவதோடு, 'நீட்' தேர்வு பயிற்சி மய்யம் என்கிற பெயரில் மாண வர்களிடம் அதிக கட்டணம் வசூ லிக்கும் சில பயிற்சி மய்யங்களால், பெரும் நிதிச்சுமைக்கும் ஆளாக்கப் படுகிறார்கள்.

'நீட்' தேர்வானது மாநில வழி பாடத்திட்டத்தில் பயிலும் மாண வர்களின் கல்வியை அர்த்தமற்ற தாக்கி, மாநில வழி பாடத்திட்டத் தில் பயிலும் மாணவர்களை, சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு மாற்றும் மறைமுக வேலைகளை செய்துகொண்டிருக்கிறது.

 'நீட்' தேர்வு தொடர்பான எனது எதிர்ப்பினை பதிவு செய்யும் அதே வேளையில்,

சேர்க்கைகளை ஒழுங்குபடுத்து வது தொடர்பாக மாநிலங்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை  'நீட்' தேர்வால் அவை கட்டுப்படுத்துகிறதா ? 

'நீட்' தேர்வு என்பது ஒரு மாநி லத்தின் சமூக மற்றும் பொருளா தார பன்முகத்தன்மையைக் கருத் தில் கொண்டு உருவாக்கப்பட்ட  ஒரு சமச்சீர்  தேர்வு முறையா? எளியவர்களுக்கு வாய்ப்பினை மறுப்பதன் மூலம்,  சமுதாயத்தின் பணக்கார மற்றும் உயர்ந்த வர்க்கத்தை மட்டுமே  'நீட்' தேர்வு ஆதரிக்கிறதா?

ஒன்றிய அரசின் சிபிஎஸ்சி கல்வி முறையில் பயிலும் மாண வர்களுக்கு எளிதாகவும், அதே சமயம்  மாநில அரசின் பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர் களின் மருத்துவக் கனவை 'நீட்' தகர்க்கிறதா? போன்ற கேள்வி களையும் எழுப்ப விரும்புகிறேன்.

மேலும், மக்கள் நலன் மற்றும் கல்வி தொடர்பாக மாநிலங்களுக்கு  அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் கடமைகளை பின்பற்றுவதன் மூலமே, கல்வியின் தரத்தை பாதுகாத்து மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்பு களில் தரமான , சம வாய்ப்புள்ள நீட்டுககு மாற்று சேர்க்கையை தமிழக அரசு புதிய சட்டம் மூலம் இயற்றி வழங்க முடியும்.

எனவே,  தமிழகத்தில் ஏற்கெ னவே மாணவர் சேர்க்கை தொடர் பாக கலைஞர்  அவர்கள் 2007இல் கொண்டு வந்து அமலில் இருந்த,   நுழைவுத்தேர்வினை இரத்து செய்யும் தமிழ்நாடு அரசு சட்டம் 3/2007அய் கவனத்தில் ஏற்று  மதிப்பெண்களின் இயல்பாக்கம் (Normalisation of Marks) மூலம்  பல் மற்றும்  மருத்துவப் படிப்பு களில் மாணவர்கள் சேர்கையை கடைப்பிடிக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று பி.வில்சன் கமிட்டியை கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment