தமிழர் தலைவர் அறிக்கைக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கம் நன்றி
இந்தியன்
ஓவர்சீஸ் வங்கியை தனியாருக்கு விற்பதை எதிர்த்து தமிழர்
தலைவர் விடுத்த அறிக்கைக்கு (22.6.2021) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தி.
முரளி சவுந்திரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு
Our message to Ayya
அய்யா
அவர்கட்கு வணக்கம்.
இந்தியன்
ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றோம். தொழிலாளர்கள்
அனைவரும் மனமொடிந்த நிலையில், வெளியான தங்களின் ஆதரவு அறிக்கை
எங்களுக்கு உற்சாகத்தையும்,
உத்வேகத்தையும் அளித்துள்ளது. தேசநலன்
மற்றும் சமூக நீதி காக்கும் எங்கள் முயற்சிக்கு உங்கள் ஆதரவை என்றும் விழைகிறோம்.
- தி.
முரளி சவுந்திரராஜன்
பொதுச்
செயலாளர்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கம்
மூடநம்பிக்கை
ஒழிப்புச் சட்டம் எப்போது?
அன்புள்ள
ஆசிரியருக்கு,
"தாயும்,
'பேயும்'−என்னே கொடுமை?" செய்திக்கட்டுரை ('விடுதலை' 21.6.2021)படித்தேன்.தமிழ்நாட்டில் விழிப்புணர்வும், பகுத் தறிவும் ஒரு தண்டவாளத்திலும் மூட நம்பிக்கை மற்றொரு தண்ட வாளத்திலும் பயணிக்கிறது! எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும்பார்வை 1980களில் உச்சத்திற்கு சென்று பின் கீழிறங்க ஆரம்பித்துவிட்டது. அலைபேசி உலக தகவல்களையும் அறிவியலையும் நம் கைகளுக்கு கொண்டு வந்த கையோடு மூடநம்பிக் கைகளையும் அறிவியல் அமிலச்சோதனையில் தேறாத செய்திகளையும் நம்மனதில் புகுத்தி நம்ப வைக்கிறது.தடுப்பூசி போடுவதற்கான வார இறுதி நாள் முகாமிற்கு கூட்டம் வருவதில்லை, காரணம் பல வீடுகளில் ஞாயிறு
அன்று இறைச்சி சமைப்பது வழக்கம்.தடுப்பூசி போட்டு விட்டு இறைச்சி சாப்பிடக்கூடாது என்ற தகவல் வாட்ஸாப் மூலம் பரப்பப்பட்டதுதான் !
மின்விளக்கு
கம்பம் போடப்பட்ட நாள் முதல் ஓடிய பேய்கள் மூட நம்பிக்கை கொண்ட மக்கள் மனதில் குடி கொண்டு விட்டதைத்தான் ஆரணியில் பேய் பிடித்துவிட்டதாக பெற்ற மகனையே கொன்ற அன்னை சம்பவம் எடுத்துக்காட்டுகிறது! பேய் பிடித்தல், சாமியாடுதல், அருள் வருதல், அருள் வாக்கு கூறுதல் இவை யாவும் மன நோயின் வெளிப்பாடுகள்.ஆனால் இவை காரணமாக பல பெண்களின் வாழ்க்கை
கேள்விக்குறியாகி விட்டது.அறிவியல் சாதனங்கள் மூடநம்பிக்கையை ஒழிக்கவல்ல மிகப் பெரிய ஆயுதங்கள். ஆனால் நம் நாட்டில் அவை மழுங்கிவிட்டன. மிக எளிதாக மக்களை சென்று சேரக்கூடிய தொலைக்காட்சி அலை வரிசைகள் யாவும் மூட நம்பிக்கையை வளர்ப்பதன்மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ள பார்க்கின்றனவே யொழிய, தினசரி ஒரு கால் மணி நேரமாவது அறிவு விளக்கக்கருத்துக்களை ஒளிபரப்பினால் அது மக்களிடையே பெரும் மாற்றத்தை உண்டு பண்ணுமே என்ற எண்ணம் இல்லை.
சீர்கெட்டுப்போன
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அதே நேரத் தில் மக்களை பெரியார் பாதையில் நடத்தி அழைத்துச் செல்லும் பொறுப்பும் இந்த அரசுக்கு உண்டு. கருநாடகா, மகாராட்டிரா மாநிலங் களில் உள்ளது போன்று தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை, பில்லி சூன்யம் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
- ஜி.அழகிரிசாமி
செம்பனார்கோயில்,
மயிலாடுதுறை மாவட்டம்
No comments:
Post a Comment