லக்னோ, ஜூன் 21- உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரை சேர்ந்த அணில்குமார் என்பவ ருக்கு கடந்த 2011ஆம் ஆண்டில் அம் மாநிலக் காவல்துறையில் காவலர் பணி கிடைத்துள்ளது. பரேலியில் இதற் கானப் பயிற்சியில் அணில்குமாரால் தேர்ச்சி பெறமுடியவில்லை. இதன் பின்னர் கோரக்பூரில் இரண்டு முறை பயிற்சிக்கு பின் தேறியவரை பரேலியில் பிலாரி காவல்நிலையத்தில் பணிக்கு அமர்த்தினர். அங்கு கடுமையான பணியை அணில்குமாரால் செய்வது சிரமமாக இருந்துள்ளது.
இதனால்,
தனக்கு பதிலாக தன் உறவினரான சுனில்குமாரை ஆள் மாறாட்டம் செய்து காவலர் பணிக்கு அனுப்பியுள்ளார். இதற்காக அவருக்கு உயர் அதிகாரிகளுக்கு ‘சல்யூட்’ அடிப் பது உள்ளிட்ட பெரும்பாலான பயிற்சி களையும் தனிப்பட்ட முறையில் அளித் துள்ளார். தனது உயர் அதிகாரிகளு டனும், காவல்நிலையத்திலும் இருப் பதை தவிர்க்கும்படியும் யோசனை கூறியுள்ளார்.
இந்நிலையில்,
சில நாள்களுக்கு முன் அவர் தனது கைப்பேசியின் வாட்ஸ் அப்பில் மாற்றிய சுயவிளம்பரப் படம் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதில் சுனில்அரசு கைத்துப்பாக்கியை பாலி வுட்நாயகர்கள் பாணியில் தூக்கிப் பிடித்து எடுத்த படங்களை பதிவிட்டிருந்தார். இதனால், அவர் மீது முராதாபாத் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு சகக்காவலர்கள் புகார் செய்துள்ளனர். இதன் மீது நடத் தப்பட்ட விசாரணையில் சுனில்குமார் போலியான காவலர் எனக் கண்டு பிடிக்கப்பட்டது.
முராதாபாத்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான பவன் குமார் கூறும்போது, ‘காவல்துறை பயிற்சியை தன் உறவினரிடம் நன்கு கற்ற சுனில் குமார் மீது எவருக்கும் சந்தேகம் எழ வில்லை. அணில்
குமாரின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து கடந்த நவம் பர் 2016இல் பணியில் இணைந்துள்ளார். பணிமாற்றல் உத்தரவில் புகைப்படம் பயன்படுத்தாததன் பலன், இக்குற்றத் திற்கு சாதகமாக இருந்துள்ளது. தனக்கு கிடைத்த ரூ.35,000 ஊதியத்தில் அணி லுக்கு மாதம் ரூ.8.000 அளித்து வந்து உள்ளார்’ எனத் தெரிவித்தார். அணில் குமாரின் இடத்தில் பணியாற்றியதையும் ஏற்றுக்கொண்ட நிலையில் சுனில் குமார் கைது செய்யப்பட்டார். இவரது உறவினரான அணில் குமாரையும் முராதாபாத் காவல்துறையினர் கைது செய்தனர். பி.எட் கல்வி
முடித்த அணில் குமார் முசாபர்நகரின் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் பணி செய்து வந்திருப்பதும் தெரிந்துள்ளது. நாட் டின் எந்த மாநிலங்களிலும் நடை பெறாத இதுபோன்ற மோசடியால் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத் தின் காவல்துறை கடும் விமர்சனங்க ளுக்கு உள்ளாகி விட்டது.
No comments:
Post a Comment