சென்னை, ஜூன் 21- மேகதாது ஆணை கட்டுவதில் பிடிவாதம் பிடிக்கும் கருநாடக அரசைக் கண் டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மோடி
தலைமையில் பா.ஜ.க.
அரசு பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டிலிருந்தே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசின் அனு மதி பெறுவதற்கு கருநாடக
மாநி லம் தொடர்ச்சியாக முனைந்தது.
2014 ஆம்
ஆண்டு டிசம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் கருநாடகத் தைச் சேர்ந்த பா.ஜ.க.
ஒன்றிய அமைச்சர் அனந்தகுமார் இல்லத் தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் அப்போதைய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.
அப்போது
ஒன்றிய பா.ஜ.க.
அரசு, மேகதாது அணை கட்டுவ தற்கு வெளிப்படையாக அனுமதி அளிக்காது என்றும், கருநாடக மாநிலம் தடுப்பு அணை கட்டிக் கொள்ளலாம் என்றும் எழுதப் படாத உடன்பாடு ஏற்பட்டதை 2015 ஜனவரி 20 இல் தஞ்சையில் காவிரி பாதுகாப்பு இயக்கம் தொடங் கப்பட்டபோது சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்தேன்.
தமிழ்நாட்டிற்கு
வஞ்சகம் செய் வதிலேயே குறியாக இருக்கின்ற மோடி அரசு, மேகதாது அணை கட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கையை கருநாடக மாநில அரசு அனுப்பியதும், ஒன்றிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை 2018 நவம்பர் 25 இல் ஆய்வு அனு மதியை வழங்கியது.
இதனை
எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கொதித்தெழுந்த நிலை யில்தான், 2018 டிசம்பர் 5 இல் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கருநாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.
கடந்த
2020 செப்டம்பர் 15 இல் கருநாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி, மேகதாது பகுதியில் அணை கட் டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து 2020 செப்டம்பர் 18 இல் கருநாடக முதல்வர் எடியூரப்பா டில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி யைச் சந்தித்தபின், மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதியை வழங்கிவிடும்; உட னடியாகப் பணிகளைத்
தொடங்கு வோம் என்ற அறிவித்தார்.
இதன்
தொடர்ச்சியாக 2020 நவம்பர் 18 ஆம் தேதி கருநாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலியும், ஒன்றிய அரசின் நிலக்கரித்துறை அமைச் சரும் - கருநாடகத்தைச் சேர்ந்தவரு மான பிரகலாத் ஜோஷியும், ஒன் றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்தனர். அதன்பின்னர் கஜேந் திரசிங் ஷெகாவத், “கருநாடக மாநில நீர் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில்,
மேகதாதுப் பகு தியில் அணை கட்டுமானப் பணி களுக்கான பொருள்களை கரு நாடக மாநில அரசு குவித்து வைத் திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தின் தென்மண்டல அமர்வு தானே முன்வந்து கருநாடக அர சின் அணை
கட்டும் முயற்சிக்கு தடை விதித்து, அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஒரு குழுவையும் அமைத்தது.
ஒன்றிய
அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல், மேகதாதில் தடுப்பணை கட்டும் முயற்சியில் கருநாடகம் ஈடுபட்டுள்ளது என்றும் தீர்ப்ப ளித்தது. மேலும் இதுகுறித்து தமிழ் நாடு அரசும், கருநாடக அரசும் தங்களது விளக்கங்களை வரும் ஜூலை 5 ஆம் தேதி தீர்ப்பாயத்தின் அமர்விற்கு வந்து தெரிவிக்க வேண் டும் என்றும் ஆணை பிறப்பித்து உள்ளது.
தேசிய
பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய இத்தீர்ப்பை இரத்து செய்யுமாறு டில்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தின் தலைமையகத்தில் கருநாடக மாநில அரசு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு நீதிபதி ஏ.கே.கோயல்,
தமிழ்நாடு அரசின் விளக்கங்களைக் கோரா மல், கருநாடகம் வைத்த கோரிக் கையை ஏற்று, தென்மண்டல பசு மைத் தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்து, ஜூன் 18, 2021 இல் தீர்ப்பளித்து இருக்கிறார்.
தென்மண்டல
பசுமைத் தீர்ப் பாயத்தின் அமர்வு ஜூலை 5, 2021 அன்று மேகதாது அணை தொடர் பாக தமிழ்நாடு - கருநாடக மாநில அரசுகளின் கருத்துகளைத் தெரி விக்க ஆணையிட்டிருந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல்
அதற்கு வாய்ப் பளிக்காமல், ஒருதலைப்பட்சமாக தீர்ப்பளித்தது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.
இதன்
பின்னணியில்தான் கரு நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை கட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துவிட்டதாக கூறிக்கொண்டு, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.
காவிரி
நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றம் 2018 பிப்ரவரி 16 இல் அளித்த தீர்ப்பு ஆகியவற்றை கருநாடக மாநிலம் அலட்சியப்படுத்துவதும், ஒன்றிய பா.ஜ.க.
அரசு அதற்கு துணை போவதும் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
காவிரியின்
குறுக்கே மேகதாது அணை கட்டப்படுமானால் தமிழ் நாட்டிற்கு உச்சநீதிமன்றத் தீர்ப் பின்படி வரவேண்டிய 177.25 டி.எம்.சி.
நீர் வெறும் கானல் நீராகப் போய்விடும். இதற்கு ஒரு போதும் ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. டில்லியில் பிர தமர் நரேந்திர மோடியை ஜூன் 17 ஆம் தேதி சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
பிரதமரிடமும் நேரில் வலியுறுத்தி உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக விரைவுபடுத்தி,
மேக தாதுவில் தடுப்பு அணை அமைக் கும் கருநாடக அரசின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:
Post a Comment