'நீட்'டை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை- ஆகஸ்ட்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

'நீட்'டை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை- ஆகஸ்ட்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

உயர்கல்வித்துறை அமைச்சர் .பொன்முடி பேட்டி

 

சென்னை,ஜூன்29- நீட் தேர்வை ரத்து செய்வதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஆகஸ்ட் மாதம்தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர்

. பொன்முடி கூறியுள்ளார்.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாடு முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் .பொன்முடி மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் தலைமை செயலகத்தில் நேற்று (28.6.2021) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர்

.பொன்முடி செய்தியாளர்களி டம் கூறியதாவது:

வருகிற ஜூலை 31ஆம் தேதி தான் சி.பி.எஸ்.சி. ப்ளஸ் 2  தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படு கின்றன. அதேபோல் மாநில கல்வி முறையில்  படித்த பிளஸ் 2 மாணவர்களின் மதிப் பெண்கள் கணக்கிடும் பணி  நடைபெற்றுவருகிறது. எனவே பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப் பெண்கள் வழங்கும் பணியானது ஜூலை 31ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டுவிடும்.

எனவே, ஆகஸ்ட் மாதம் முதல் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என முதல்வர் அறி வுறுத்தியுள்ளார்.  தனியார் கல்லூரிகளில் இப்போதே மாணவர் சேர்க்கை நடத்தப் படவிருப்பதாக தெரியவருகின் றன. அதுகூடாது. ப்ளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்கள் இறுதி செய்யப்பட்டு வெளியிட்டப்பிறகு தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண் டும்.  9ஆம் வகுப்பு மதிப்பெண் களின் அடிப்படையில் பாலி டெக்னிக் மற்றும் அய்டிஅய் படிப்புகளுக்கு கடந்த 2 தினங்களாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுவருகிறது. பொறியியல் படிப்புகளுக்கு வழக்க மான நடைமுறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப் படும். கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதல் தலை முறை பட்டதாரிகளுக்கான அனைத்து சலுகைகளும் தொடரும் என முதல்வர் அறிவித்திருக்கிறார்.

நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வதற்கு தேவையான அனைத்து சட்டரீதியான நட வடிக்கைகளையும் முதல் அமைச்சர் மேற்கொண்டு வரு கிறார். எம்.ஃபில் முதுகலை பட்டப்படிப்பு குறித்து  ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் இருவேறு கருத்துகளை கொண் டுள்ளனர். சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில் படிப்புகள் ரத்து செய்யப்பட்டதற்கும் புதிய கல்வி கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை. எம்.ஃபில் வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர் களிடையே ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை துணைவேந்தர் களாக நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான் முதல் அமைச்சரின் நிலைப்பாடு. இது குறித்து துணைவேந்தர்களை நியமிக்கும் கமிட்டியில் அரசு வலியுறுத்தும். இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியா கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment