அட காமாலைக் கண்ணர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

அட காமாலைக் கண்ணர்களே!

'துக்ளக்' குருமூர்த்தி கும்பலுக்கு சதா பெரியார், வீரமணி தி..வைப் பற்றிய நினைப்பு தானா? தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக் கிறார்களா? தந்தை பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஓடினாலும், அக்ரகாரக் கூட்டத்தின் நினைவுகளில் இரவு பகல் எந்நேரத்திலும் திகிலை, அச்சத்தை அக்னியாக மூட்டிக் கொண்டேதான் இருக்கிறார்.

இன்று (7.7.2021) வந்த 'துக்ளக்'கில் ஒரு கேள்வி பதில்.

கேள்வி: டாஸ்மாக் திறந்த இரண்டு நாட்களில் ரூ.292 கோடிகளுக்கு குடித்துள்ள தமிழனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: பெரியார் மண்ணில் எப்படி நமக்கு எட்டுத் திக்கும் புகழ் பரப்பும் தமிழர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

(7.7.2021 'துக்ளக்' பக்.10)

ரூ.292 கோடிக்கு மது விற்பனையானதுக்கும், பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? மொட்டைத் தலை 'சோ'வுக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வேலைதானே இது.

மஹா பெரியவாள் வாழ்ந்த மண்ணில் படுகொலைகள் (சங்கரராமன் படுகொலை  - காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில், அந்த வரதராசன் முன்னிலையில் அதுவும் ஒரு பட்டப் பகலில்)

மயிலாப்பூர் கபாலிஸ்வரனின் மயிலையில் கள்ளச் சாராயம்! சீரங்கம் ரெங்கநாதன் மண்ணில் - கல்யாண வீட்டில் தீ - மணமகன் மற்றும் சுற்றத்தார் சாவு என்று சொல்லலாமா?

இன்னொன்று.... தமிழன், தமிழன் என்று  இன் னொருபுறம் கிண்டலும், கேலியும் செய்வதைத் தமிழர்களே பார்த்தீர்களா?

"சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண் டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான்!"

- டாக்டர் டி.எம். நாயர்

No comments:

Post a Comment