பேரறிவாளனுக்கு பரோல் 30 நாள் நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

பேரறிவாளனுக்கு பரோல் 30 நாள் நீட்டிப்பு

திருப்பத்தூர், ஜூன் 29 -  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் 30 நாள் பரோல் வழங்கப்பட்டதுநேற்றுடன் (28.6.2021) பரோல் முடிந்த நிலையில், சந்தைக்கோடியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்   கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து வாணியம்பாடி பகுதியில் பேரறி வாளனை அழைத்து சென்ற காவல்துறை வாகனம்  மீண்டும் ஜோலார்பேட்டைக்கு திரும்பியது

No comments:

Post a Comment