உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி,ஜூன்29- கேரளாவில் அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக் கீடு கோருவதற்கு மாற்றுத் திறனாளிக்கு உரிமை உள்ளது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கேரள அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் 1950ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு என்பது அறி முகம் செய்யப்பட்டது. அப்போது முதலாவதாக 45 சதவீதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து 1957ஆம் ஆண்டில் இது 50 சதவீத மாக உயர்த்தப் பட்டது. இதில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு ஒரே பிரி வாக வழங்கப்பட்டது. இந் நிலையில், அரசு பணியில் பதவிஉயர்வு வழங்கப்படும் போது மாற்றுத்திறனாளி களுக்கும் போதிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். மேலும் அதற்கு உரிமை உள்ளது என்றும் உத்தரவு பிறப்பிக்க வேண் டும் என மாற்றுத்திறனா ளிகள் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டுக்கான உரிமை உள்ளது என உத்தர விட் டிருந்தது.இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தர விற்கு எதிராக, கேரள அரசு தரப் பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக் கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே.கவுல் தலை மையிலான அமர்வு ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி யுள்ளது. அதில், கேரள மாநிலத்தில் உள்ளஅரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்இட ஒதுக்கீட் டில் மாற்றுத் திறனாளி களுக்கும் உரிமை உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு மீண்டும் உறுதி செய்யப்படு கிறது. இதனை அடுத்த மூன்று மாதங்களில் மாநிலஅரசு கண்டிப்பாக அமலுக்கு கொண்டு வந்து
நடைமுறைப்படு த்த வேண்டும் என உத்தர விட்ட நீதிபதிகள், கேரள அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத் தனர்.

No comments:
Post a Comment