புதுடில்லி, ஜூன்29- இறந் தவர்களின் உடல்கள் கங்கை ஆற்றில் வீசப் படுவது ஒரு தீவிரப் பிரச்சினை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இறந்தவர்களின் உரிமைகளை பாதுகாக்க கொள்கை வகுக்க வேண் டும், கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல் களை எரித்திட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று கோரி ஒரு தன்னார்வ அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட் டது.
இந்த மனுவில், கடந்த மே மாதம் கரோனா தொற்றால் இறந்தவர் களின் உடல்கள் கங்கை ஆற்றில் வீசப்பட்டது சுட்டிக் காட்டப்பட்டி ருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதி பதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று
(28.6.2021) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதி பதிகள், “இந்த விவகாரத் தில் தேசிய மனித உரி மைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) ஏற்கெ னவே சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக வேண்டும். இது ஒரு தீவிரப்பிரச்சினை என் பதை நாங்கள் அறிந்துள் ளோம்.
அத்தகைய ஒரு சூழல் தற்போது இல்லை” என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த மாதம், “இறந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப் பதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். புதி தாக தற்காலிக மயா னங்கள் ஏற்படுத்த வேண் டும்" என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்திருந்தது. கடந்த மே மாத தொடக்கத்தில் நாட்டில் கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, பீகார் மற்றும் உ.பி.யில் ஒவ்வொரு நாளும் இறந் தவர்களின் உடல்கள் நூற்றுக்கணக்கில் கங்கை ஆற்றில் மிதந்து வந்தன. இவை, கிராமப்புறங் களில் கரோனா தொற் றால் இறந்தவர்களின் உடல்கள் என கூறப்பட் டது. கரோனா நோயா ளிகளின் உடல்களை தகனம் செய்ய கிராமப் புறங்களில் உரிய நடை முறைகள் அமலில் இல் லாத நிலையில் நோய்த் தொற்றுக்கு பயந்து உள் ளூர் மக்கள் இவற்றை ஆற்றில் வீசியதாக கூறப் பட்டது. பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு, இனிமேலும் உடல்கள் ஆற்றில் வீசப்படுவதை தடுக்குமாறு உ.பி. மற்றும் பீகார் அரசுகளுக்கு உத் தரவிட்டது.
இதனிடையே கங்கையில் உடல் கள் வீசப்பட்டதற்கு காரணமான அதிகாரி களுக்கு எதிராக விசா ரணை கோரி மற்றொரு பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதி அசோக் பூஷண் தள்ளுபடி செய்தார்.

No comments:
Post a Comment