பெண்கள் மீதான வன்முறை விரைவான தண்டனைக்காக சிறப்பு நீதிமன்றம் பினராயி விஜயன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

பெண்கள் மீதான வன்முறை விரைவான தண்டனைக்காக சிறப்பு நீதிமன்றம் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம், ஜூன் 29- பெண்கள்மீதான வன் முறைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள் ளார்.

குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்குவதை உறுதி செய்ய சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடியுமா என் பதை அரசு ஆராயும் என்றும் அவர் கூறினார்.

காவல்துறைக்கான கட்டடங்களின் அடிக்கல் நாட்டும் பணியை இணை யத்தில் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதா வது:  வரதட்சணை வழக் குகளில் கடுமையான நட வடிக்கை எடுக்க வேண் டும். வரதட்சணை என் பது ஒரு சமூக பேரழிவு. ஒரே தொலைபேசி அழைப் பில் புகார்தாரர்களை காவல்துறை அணுக வேண்டும். சட்டத்தின் பெயரால் அது பாதிக்கக் கூடாது. பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கை களை முழுமையாக்க காவல்துறையின் ஒத்து ழைப்பு தேவை. பெண்கள் அச்சமின்றி காவல் நிலை யத்திற்கு வருவது சாத் தியமாக வேண்டும். கேர ளத்தில் சில அவமானகர மான சம்பவங்கள் அண் மையில் நடந்துள்ளன. கேரளம் அத்தகைய நாடாக மாற வேண்டிய தில்லை. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வார்டு நிலை விழிப் புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதுபோன்ற வழக்கு களில் காவல்துறை கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப வன்முறை உள்ளிட்ட சிரமங்களை அனுபவிக் கும் பெண்களுக்கு அது குறித்து புகாரளிக்க சிறப்பு எண் ஒதுக்கப் படுகிறது. இதற்காக மகளிர் காவல்துறை அதிகாரிக்கு சிறப்புப் பணி வழங்கப்பட்டுள் ளது. இது தவிர, மாநில காவல்துறைத் தலைவரின் அலுவலகத்தையும் தொடர்புகொள்ளலாம். மேலும் சில  பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளதாக பினராயி விஜயன் கூறினார்.

No comments:

Post a Comment