முதலமைச்சரின் வேண்டுகோள் கடிதத்திற்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்!
தமிழ்நாட்டில் இதுவரை 1.43 கோடி தடுப்பூசிகளே போடப்பட்டுள்ளன. தடுப்பூசி கைவசம் இல்லை என்ற நிலை உள்ளது. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவிகித அளவு தடுப்பூசிகள் வழங்குவதை 10 சதவிகிதமாகக் குறைத்து, அரசுக்கு 90 சதவிகிதம் என்ற அளவீட்டில் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கரோனா கொடுந்தொற்றின் மூன்றாம் அலை, டெல்டா பிளஸ் ஆகியவை இன் னமும் நம் நாட்டு மக்களை அச்சுறுத்துவதை ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை மாநிலங்களுக்குக் கடிதம் எழுதி, முன் னெச்சரிக்கையான தடுப்பு நடவடிக்கை களில் மாநிலங்கள் கவனம் செலுத்துவது மிக அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசி: 90 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தி!
டெல்டா பிளஸை எதிர்ப்பதற்கு வழி, தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முதல் டோஸ் மட்டும் போட்டால் அது 33 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தியைத்தான் தரும் வாய்ப்பு உண்டு; இரண்டாம் டோசும் போட்டு முடித்தவர்கள் என்றால், அது 90 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தியின் பல னைத் தரும் என்றும் மருத்துவ வல்லுநர் களும், ஆய்வாளர்களும் தெளிவுபடுத்து கிறார்கள்.
தமிழ்நாட்டில் தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்பட பலரும் போட்டுக் கொள்வதில் ஒரு மாபெரும் பிரச்சார இயக்கம்போல் தி.மு.க. அரசு, முதலமைச்சர் தலைமையில் செய்து, தயக்க மின்றி அனைத்துத் தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தாங்களாகவே முன்வந்து வரிசையில் அரசு மருத்துவ மனைகள்முன் திரளுகிறார்கள்.
இப்படி விருப்பமும், தேவையும் அதிக மாக இருக்கும் அளவுக்கு, ஒன்றிய அரசு அளிக்கும் தடுப்பூசி விநியோகம் அதற்கு ஈடுகட்டக் கூடியதாக இல்லாததால், மக்கள் பெரிதும் ஏமாற்றமே அடையும் வேதனை யான நிலைமை இருக்கிறது.
ஒன்றிய அரசின் அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
இதனை ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் நேற்று (28.6.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவைக்கேற்ப தடுப்பூசிகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு வற்புறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்!
‘‘1. தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வதில், நாட்டில் உள்ள இதர மாநிலங்களைவிட மிகவும் குறைவாக தடுப்பூசி ஒதுக்கீடு இருந்த மாநிலங்களில்
தமிழ்நாடும் ஒன்றாக - அதிலும் குறிப்பாக ஆயிரம் பேருக்குத் தேவையான டோஸ்கள் என்ற அடிப் படையில் மிகக் குறைவான விகிதத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். எங்கள் மாநிலத்திற்கான தடுப்பூசிகள் ஒதுக்கீட்டை கடந்த காலத்தில் குறைவாக அளிக்கப் பட்டதை சரி செய்வதற்காக ஒரு கோடி டோஸாக உயர்த்தும்படி கோரி நான், தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை.
மற்றொரு முக்கிய பிரச்சினை
2. ஜூன்
- ஜூலை மாதங்களுக்கான உயர்த்தப்பட்ட ஒதுக்கீட்டுக்கான உயர்வு மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதிக அளவிலான ஒதுக்கீட் டைப் பெற்றிருந்தனர். அதனால் அவர்கள் ஏற்கெனவே அதிக அளவிலான பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே, என்னு டைய முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதுடன், மற்றொரு முக்கிய பிரச்சினை குறித்தும் வலியுறுத்த விரும்பு கிறேன்.
புதிதாக தாரளமயமாக்கப்பட்ட தடுப்பூசி கொள்கைகளின்படி ஒன்றிய அரசு 75 சதவிகித தடுப்பூசிகளை வாங்கிக் கொண் டிருக்கிறது. மீதமுள்ள தடுப்பூசிகளை (25 சதவிகிதம்) தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வாங்கிக் கொண்டு தனி
நபர் களுக்குத் தடுப்பூசி போடுவதற்காக, வாங்கிக் கொள்ள அனுமதித்து வருகிறது.
தற்போது கைவசம் உள்ள தடுப்பூசி களை தனியார் மருத்துவமனைகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு, அனுமதி அளிக்க நான் ஒப்புக்கொண்டபோது, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு மாதத்தில் 25 சதவிகிதம் ஒதுக்கீடு செய்வது, அவர்கள் உண்மையாகப் பயன்படுத்துவதை ஒப் பிடும்போது, மிக அதிகமாக இருக்கும் என்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் மொத்தம் 1.43 கோடி டோஸ்கள் தடுப்பூசிகளே போடப்பட்டுள் ளன. அவற்றுள் தனியார் மருத்துவமனைகள் 6.5 லட்சம் டோஸ்களை மட்டுமே பயன் படுத்தியுள்ளன. இது 4.5 சதவிகிதமே ஆகும். நடப்பு மாதத்திலும்கூட மாநிலத்தில் போடப்பட்ட 43.5 லட்சம் டோஸ்களில் தனியார் மருத்துவமனைகள் 4.5 லட்சம் டோஸ்கள் தடுப்பூசிகளை மட்டுமே பயன் படுத்தியுள்ளன. இது வெறும் 10 சதவிகித மேயாகும்.
ஒரு நாள் பயன்பாட்டிற்கே குறைவானதாகும்!
3. மேற்கண்ட தேவைக்கும், வழங் கலுக்கும் இணையில்லாத நிலைமையோடு, தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைகளிடம் 7 முதல் 8 லட்சம் வரையி லான டோஸ்கள் கையிருப்பில் இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்குத் தேவையான அளவுக்கு இணையான தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், அரசு மருத்துவ மனைகளில் வெறும் 2 லட்சம் டோஸ்கள் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. இது அவர்களின் ஒரு நாள் பயன்பாட்டிற்கே குறைவானதாகும்.
இதை அறிவுபூர்வமான செயல்பாட்டின் மூலமே சீர் செய்ய முடியும்.
உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சத விகிதம் ஒதுக்கீடு செய்வது உற்பத்தி யாளர்களின் அறிவுபூர்வமற்றதாகும். அவர்களை ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒப்பீட்டு அளவில் சிறப்பான விலைக்கு விற்க அனுமதிப்பது போன்றதாகும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதோடு, தற்போதைய தேவை தடுப்பூசி உற்பத்தி யாளர்களுக்கு சிறந்த அளவிலான கட் டணத்தை நிர்ணயிப்பதாகும்; நம்முடைய மக்களுக்குத் தடுப்பூசியை இயன்ற அளவு வேகமாக, அதிகமாக போடுவதற்கான உடனடியான இலக்கை எட்ட இயலாமல் செய்வதாகும்.
அதிகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின்மூலமே சாதிக்க முடியும்!
இதனை எட்டுவதற்கு அரசு மருத்துவ மனைகளுக்கு அதிகரிக்கப்பட்ட ஒதுக் கீட்டின்மூலமே சாதிக்க முடியும். அதே நேரத்தில், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கான ஒதுக் கீட்டை குறைப்பதன்மூலம் பாதிக்கப்பட்டு விடவும் கூடாது; தற்போதுள்ள புதிய கொள்கையான இணைக்கப்பட்ட விலை யின்படி உறுதி செய்வதற்காக ஒன்றிய அரசின் கொள்முதல் விலை உயர்த்தப் படுவதன்மூலம் உறுதி செய்யவேண்டும்.
எனவே, இக்கொள்கையில் மாற்றம் செய்து,
தனியார் மருத்துவமனைகளுக்கு 25% என்பதை 10% என்று மாற்றி அமைக்கவேண்டும்!
(அ) மாநில அரசுகளுக்கு இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த தடுப்பூசிகளை, ஆயிரம் மக்களுக்கான விகிதத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்து, தேவைப்படும் ஈடு செய்யும் ஒதுக்கீடுகளை குறைவாக ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிகமாகச் செய்யவேண்டும்.
(ஆ) அரசு மருத்துவமனைகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் இடை யிலான ஒதுக்கீட்டை தற்போதுள்ள 75 : 25 என்ற விகிதத்திற்கு மாறாக, 90 : 10 என்ற சதவிகிதமாக மாற்றி அமைக்கவேண்டும்.''
- இவை யாருக்கும் பாதகமில்லாத அருமையான, நடைமுறைக்கு உகந்த நல்ல யோசனைகளாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த யோச னைகளை காலந்தாழ்த்தாமல் செயல் படுத்தவேண்டும்.
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களை அய்ரோப்பிய யூனியன் நாடுகள் அங்கீகரிக்காதாம்!
அடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டால், அய்ரோப்பிய யூனியன் நாடுகள் அங்கீகரிக்காது - வெளிநாட்டு பயணங்களில் அனுமதி மறுக்கும் நிலைமை ஏற்பட்டிருப்பதையும் அவசரமாகக் கவனித்து, ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை இந்தத் தடையைப் போக்க முன்வரவேண்டும். அம்மருந்து ஊசிகள்அய்ரோப்பா மருத்துவ முகமை யின் அங்கீகாரத்தை விரைந்து பெற வேண்டியது மிகவும் முக்கியமான அவசரத் தேவைகளில் ஒன்று. இது நாட்டின் வளர்ச்சி, வணிகத் துறை, மற்ற பல துறைகளின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதால், விரைந்து செய்க!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.6.2021

No comments:
Post a Comment