மேலும் ரூ.100 கோடி
திரவ ஆக்சிஜன் கொள்முதல் செய்ய மேலும் ரூ.100 கோடியை ஒதுக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆய்வகம்
டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் ஆய்வகம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
புதிய தடுப்பூசி
அமெரிக்காவின் ‘மாடர்னா' தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி.
ஆண்களைப் போல...
தெ.ஆப்பிரிக்காவில் ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம் - சட்டம் அனுமதிக் கிறது - அதேபோல பெண்களும் பல ஆண்களைத் திருமணம் செய்துகொள்ளும் சட்டம் வர உள்ளது.
நேரில்...
முகநூல், கூகுள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற நிலைக்குழுமுன் நேரில் வருகை.
காசநோய்
நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் காசநோய்ப் பாதிப்பு 35,400 பேர்.
பாழ்!
திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள குறை களாலும், காலதாமதத்தாலும் ஒன்றிய அரசு வீணடித்த தொகை ரூ.4.4 லட்சம் கோடி - என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
வருவாய்
2020-21 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் வருவாய் ரூ.20.16 லட்சம் கோடி. இதில் நேரடி வரி ரூ.9.45 லட்சம் கோடி, மறைமுக வரி ரூ.10.71 லட்சம் கோடியாகும்.
No comments:
Post a Comment