படிப்பும் பட்டங்களும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

படிப்பும் பட்டங்களும்!

மருத்துவர் சோம.இளங்கோவன் இயக்குநர்

பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா)

பெரியார் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் நன்கு கலந்து கொள்வதும், அருமையான கேள் விகளைக் கேட்பதும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.

ஒரு மாணவி கேட்டார். “தந்தை பெரியார் என்ன படித்திருக்கின்றார்?” அதற்கு நேரடிப் பதில்மூன்றாம் வகுப்பு!”

அது சரியான பதிலாகுமா?

படிப்பு வேறு, பட்டங்கள் வேறு!  மேலும் பார்த்தால் அறிவு வேறு!

தந்தை பெரியார் அவர்களின் முக்கிய வேலையே மூன்று தான்! படிப்பது, எழுதுவது, பேசுவது! மற்ற சாப்பாடு, தூக்கம், குளிப்பது எல்லாம் அதற்குப் பின்னர் தான்!

அவர் என்ன படித்தார்? எல்லாவற்றையும் படித்தார்! பாடப் புத்தகங்களில் என்ன எழுதப் பட்டிருக்கின்றது என்பது முதல் உலகப் பெரிய விஞ்ஞானிகள்  என்ன கண்டு பிடித்து எழுதி யுள்ளார்கள் என்பது வரைப் படித்தார். உலகப் பெரிய அறிஞர்களாகக்  கருதப்பட்ட பெர்ட் ரண்ட் ரஸ்ஸல், இங்கர்சால், காரல் மார்க்சு போன் றோர் நூல்களை அந்தந்த அமைப்புக்களிடம் அனுமதி பெற்றுக் குறைந்த விலையில் வெளி யிட்டுக் கூட்டங்கள் தோறும் விற்பனை செய் தார். அவற்றைக் காட்டி, “இப்படிச் சொல்லியிருக் கின்றார்என்று பேசுவார். 1924இல் மிகப் பெரிய அமெரிக்க விஞ்ஞானி நிக்லாசு டெசுலா வெளியிட்டக் கருத்துத் தான், தந்தை பெரியாரின் இனி வரும் உலகத்தில், ஒவ்வொருவரிடமும் மிகத் தொலைவில் உள்ள ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளும், பார்த்துக் கொள்ளும் கருவி இருக் கும் என்று சொன்னது. பல அறிவியல் இதழ்களை வருவித்துப் படித்தார், அவை பற்றிக்குடிஅரசி'ல் அவரே விலாவாரியாக எழுதினார்!

அவரிடம் இருந்த ராமாயண நூல்களைப்  போல் வேறு யாரிடமும் இல்லை என்ற அள விற்கு வாங்கி, அவற்றைப் படித்து, அதில் அவ ருக்கு ஏற்பட்ட வினாக்களுக்குச் சரியானவர் களிடம் விவாதித்துப் பதிலும் தெளிவும் கிடைத்த பின்னர் தான்இராமாயண ஆராய்ச்சிக்  கட்டு ரைகளை எழுதி நூலையும் வெளியிட்டார்! அவருக்குப் பல மொழிகள் தெரியும். பல மொழி  வல்லுநர்களுடனும் பேசிக் கேட்டுள்ளார்.

உண்மையிலேயே தந்தை பெரியார் அவர் களைப் போல் பலவற்றைப் படித்தவர்கள் வேறு யாரும் உள்ளார்களா என்பதே அய்யப்பாடு தான்!

நிறையப் பட்டங்கள் வாங்கியவர்களுடன் விவாதித்தார். அவர்கள் கேட்ட அத்துணைக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். விளக்கமாகப் பதில்கள் எழுதினார். அவர் கையாலேயே எழுதினார்! அவர் கேட்ட கேள்விகளுக்குத்தான் எத்தனையோ பட்டங்கள் பெற்றவர்கள் பதில் சொல்ல முடிய வில்லை!

அறிவியல் ஆசிரியர்களிடம் கேட்டார், “கிர கணம் என்று அறிவியல் பாடம் நடத்துகின்றாய், ஏன், எப்படி என்று விளக்கமாய் சொல்லுகின் றாய். அப்புறம் என்ன வீட்டிற்குப் போனவுடன் உன் அறிவு உன்னை விட்டுப் போய்பழைய குருடிக் கதவைத் திறடி என்று நடக்கின்றாய்என்று கேட்டார்.

செவ்வாய் பற்றி, அது எவ்வளவு பெரிது, பூமியிலிருந்து எவ்வளவு தொலைவு என்று விவரமாகச் சொல்லிக் கொடுத்து விட்டு அப்புறம் என்ன பல்லாயிரக் கணக்கான பெண்களின் வாழ்வைச் சீரழிக்கும் செவ்வாய் தோஷம்?

மயக்கம் போட்டவனுக்கு மூலிகை வேண்டும். அதைக் கண்டுபிடிக்க நேரம் ஆகும் என்பதற்காக அனுமான் மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வருகின்றான் என்று மிகவும் இலக்கிய நயத்துடன் பாடம் சொல்கின்றாய். ஆனால் ஒரு பையன் இந்தக் கதையெல்லாம் ஏன் சார் உண்மையென்று நம்புகின்றார்கள்? என்று கேட்டால் அதற்குப் பதில் சொல்ல வேண்டாமா? குரங்கு கோவில் உலகெங்கும் இருப்பதும் அதற்குப் பெரிய பட்டதாரிகள் வடை மாலை  போடுவதும் எப்படி? (அமெரிக்காவிலும் நடக்கின்றது)”.

பெரும் புலவர்கள் கூட்டத்தில் பேசும் போது அவர்களைப் பார்த்துத் தான் கேட்டார். “இந்தப் புராண இலக்கியம் என்று சொல்லும் இராமாய ணம், பெரிய புராணம் குப்பைகளேயேப் பேசிக் கொண்டிருந்தால் தமிழ் மொழி எப்படி முன்னே றும்? உலகம் எங்கேயோ சென்று கொண்டுள்ளது, “நீங்கள் இன்னும் காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றீர்களே!” என்று நேரிலேயேதான் கேட்டார்!

இலக்கியத்தை நன்கு கரைத்துக் குடித்த வர்கள் படித்தவரா, அவற்றைப் படித்து அதில் உள்ளக் குப்பைகளைக்  காட்டிய பெரியார் படித்தவரா? படிப்பது அறிவுடன் சேர்ந்திருந்தால் தான் படிப்பு, இல்லாவிட்டால் வெறும் பட்டம் தான்!

அவர் கல்லூரிப் பட்டங்கள் பெறாதவர் தான். ஆனால் அந்தப் பட்டங்கள் வாங்கிய அத்து ணைப் பேர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அசராமல் பதில் சொன்னார்.  அவர் கேட்ட கேள்விகளுக்கு இந்தப் பட்டதாரிகள் பதில் சொல்ல முடியவில்லையே? ஏன்?

அவர் அவருக்காகவும், மக்களுக்காகவும் படித்தார்! பல பட்டதாரிகள் அவர்களுக்காகவும் அவர்களுடைய பிழைப்பிற்காகவும் படித்தனர்!

அவர் படிப்பால்  என்ன நன்மை? மற்றவர்கள் படித்து அவரவர் துறைகளிலே பெரியவர்கள் ஆனார்கள். பொருள், புகழ்,பதவிகள் ஈட்டினார் கள். அவர்களில் பலரால் மக்கள் எந்த நன்மை யையும் அடையவில்லை என்பதே உண்மை யாகவுள்ளது. சிலரால் சில பயன்கள் கிடைத்தி ருக்கலாம், அவ்வளவு தான்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறை யப் படிப்பவர். அவர் படித்தது மற்றவர்களுக்குப் பயன் பட வேண்டும் என்று அவற்றை மிகவும் அருமையாகப் புரியும் வண்ணம்வாழ்வியல் சிந்தனைகள்' என்று எவ்வளவுஎழுதியுள்ளார்?

 தந்தை பெரியார் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது போலநான் அறிந்தவரை எந்த சமூகப் போராளியும் அவரது வாழ் நாளிலே யேத் தங்களைப் போல் வெற்றி கண்டதில்லைஎன்ற அளவில் சாதித்துள்ளார் என்றால் அது படிப்பாலா, பட்டங்களினாலா?

தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் அவரது சாதனைகள் போற்றப்பட வேண்டியவை!

உங்களுக்கெல்லாம் தெரியும், சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட வடிவமாவதற்கு முன் அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரி டம் காட்டிக் கருத்துக் கேட்டு அனுப்பினார். பெரியார் அவர்கள்தாலி காட்டுவதும், மாலை மாற்றுவதும் பற்றி and (அண்ட்) என்று இருந் ததை and/or (அண்ட்/ஆர்) என்று ஒரு வார்த் தையில் பெருங் கடலையே திணித்து விட்டார்! அதைப்பார்த்து வியந்த அறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் கேட்டாராம்'' என்ன வீரமணி நீங்கள் எம்..பி.எல், நான் எம்.., ஆனால் பெரியார் பெரியார் தான்என்றாராம்.

அது போலவே பெயருக்குப் பின்னர் மிகவும் நிறைய பட்டங்கள் வாங்கியவர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றும் போது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களுக்கு adequate இடங்கள்   வேண்டுமென்று போட்டிருந்ததை proportionate என்று மாற்றச் சொல்லி எழுதினார். பெரியார் சொன்னதை அப்படிப் போட்டிருந்தால் இன்று நாம் போராட வேண்டி இருந்திருக்காது!

ஆகவே பட்டங்கள் மட்டும் போதாது, அவை படிப்புடன் சேர்ந்திருக்க வேண்டும், அந்தப் படிப்பும் அறிவுள்ளதாக இருக்க வேண்டும்.

அது தான் பெரியார்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு.

No comments:

Post a Comment