பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் அகிலேஷ் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் அகிலேஷ் கருத்து

லக்னோ ஜூன் 25- உத்தரப் பிரதேச மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்த லில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சித் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் 2022இல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது யோகிஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கான பணி களை இப்போதே பல கட்சி கள் தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டிய ளித்த  சமாஜ்வாடி கட்சித் தலை வரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சரு மான அகிலேஷ் கூறியதாவது,

தற்போதைய பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனால்  மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.  அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேச தேர்தலில் மக்களின் கோபம் வெளிப்படும். பாஜக படுதோல்வி அடையும்.

கடந்த தேர்தல்களின் போது, பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது சரியாகப்படவில்லை. அது நன்றாக அமையவில்லை, ஆதலால், இனிவரும் தேர்தல் களில்,  பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கம் எண் ணம் இல்லை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (காங் கிரஸ்) மற்றும் காங்கிரஸை பெயரிடாமல் அகிலேஷ் கூறினார்: “பெரிய கட்சிகளு டனான எனது அனுபவம் நல்லதல்ல, நான் அவர்களு டன் எந்த கூட்டணிக்கும் வர மாட்டேன். எங்கள் கட்சி கொள் கைகளுடன் ஒத்துப் போகும்   கருத்துடைய சிறிய கட்சிகளு டன் கூட்டணி அமைத்து தேர் தலை எதிர்க்கொள்ள திட்ட மிட்டு வருகிறேன். அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மாநிலத்தில் உள்ள 403 இடங்களில்  300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் கரோனா தொற்றின் உண்மையான எண்ணிக் கையை மறைத்ததால்தான் மக்கள் கும்ப மேளாவுக்குச் சென்றார்கள். ஆனால், அங்கு சென்றதால்தான், .பி.யில் தொற்று பரவல் அதிகரித்தது, கிராமப்புறங்களில் கரோனா தொற்றின் தாக்கம் கடுமையா னது. கரோனா மரணங்களை அரசு மறைக்கிறது. இதனால், மக்கள் யோகி ஆதித்யநாத் அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களின் கோபம், வருகின்ற உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தோல்வியடையச் செய்யும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment