தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 25- தமிழ் நாடு கட்டுமானத் தொழி லாளர்கள் நலவாரியத் தில் பதிவு பெற்ற தொழி லாளர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை யும், வெளிமாநிலத் தொழி லாளர்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.

கரோனா பெருந் தொற்றிலிருந்து கட்டுமா னத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடும்  சீரிய நோக்கத்தோடு, தமிழ் நாடு கட்டுமானத் தொழி லாளர்கள் நலவாரியத் தில் பதிவு பெற்ற 13,41,494 தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கிணங்க, முதற் கட்டமாக 2 இலட்சம் கட்டுமானத் தொழிலா ளர்களுக்குச் சிறப்பு முகாம் மூலமாக கரோனா தடுப்பூசி செலுத் தும் பணியினையும், கரோனா பெருந் தொற் றுப் பரவல் காரணமாக அறிவிக்கப் பட்ட பொது முடக்கத் தால் பணி வாய்ப்பை இழந்த, குடும்ப அட்டை இல்லாத, புலம் பெயர்ந்த வெளி மாநிலத் தொழி லாளர்கள் பசியால் வாடக் கூடாது என்ற உயரிய எண்ணத் தோடு, 1,29,444 தொழிலாளர்களுக்கு 6 கோடியே 66 இலட்சத்து 44 ஆயி ரத்து 243 ரூபாய் மதிப்பீட் டில், 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் திட்டத்தையும் இன்று நந்த னம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி யில் தமிழ்நாடு முதல மைச்சர்  மு.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment