மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கரோனா மகாராட்டிரத்தில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கரோனா மகாராட்டிரத்தில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து

மும்பை, ஜூன் 25- மகா ராட்டிர மாநிலத்தில் மீண்டும் கரோனா அதி கரித்துள்ளதால் அங்கு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து செய்யப் பட உள்ளது.

கரோனா இரண்டாம் அலை தாக்குதலால் பாதிக் கப்பட்ட மாநிலங்களில் மகாராட்டிரா முதல் இடத்தில் உள்ளது.   இதை யொட்டி மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவிக் கப்பட்டது.   ஊரடங்கால் கரோனா பாதிப்பு குறை யத் தொடங்கியது.   பொது மக்களின்வேண்டு கோளுக்கு இணங்க மகா ராட்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கில் தளர் வுகளை அறிவித்தார்.

தற்போது மகாராட்டி ராவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  ஏற் கெனவே மகாராட்டிரா வில் மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் ஜூலை முதல் மும்பை உள்ளிட்ட பல பெரு நகரங்களில் மேலும் தளர்வுகளை அறி விக்க அரசு திட்டமிட்டி ருந்தது.  தற்போது தளர் வுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மகா ராட்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, “தற்போது இரண் டாம் அலை கரோனா முடிவுக்கு வர உள்ளது.  இந்நிலையில் மேலும் தளர்வுகளை அறிவித் தால் மூன்றாம் அலைக்கு அது காரணமாகி விடும்.  தற்போது மாநிலத்தில் மருத்துவமனை படுக்கை கள், தடுப்பூசி, மற்றும் ஆக்சிஜன் இருப்பை பொறுத்து ஊரடக்கில் தளர்வுகளை அறிவிக்க முடியும்எனத் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment