தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை,
ஜூன் 21- தமிழ்நாட்டில் மின்துறை சார்ந்த குறைகளை பொது மக்கள் தெரிவித்திட "மின்னகம்" என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மய்யத்தை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் நேற்று
(20.6.2021) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில்
உள்ள மூன்று கோடியே பத்து இலட்சம் மின் இணைப்புதாரர்களின் மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின்னழுத்த
ஏற்ற / இறக்கம், உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின் பெட் டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள், மின்தடை குறித்த தகவல், குறைந்த மின்னழுத்தம், உயர் மின்னழுத்தம் போன்ற மின்துறை சார்ந்த தகவல்கள் / புகார்களைப் பொதுமக்கள்
தெரிவிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
நேற்று (20.6.2021) சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற் றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள "மின்னகம்" என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மய்யத்தைத் திறந்து வைத்து, அதற்கான 9498794987 என்ற தனிக் கைப்பேசி எண்ணையும் அறிமுகப்படுத் தினார்.
இப்புதிய
மின் நுகர்வோர் சேவை மய்யம், 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மய்யத்தில் ஒரு ஷிப்ட்டுக்கு 65 நபர்கள் வீதம் மூன்று ஷிப்டுகளுக்கு 195 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அப்பணியாளர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களைக் கணினி மூலம் பதிவு செய்து, இப்புகார்கள்
சம்பந்தப்பட்ட மேற்பார்வைப்
பொறி யாளர், செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர் அலுவலகங்களுக்கு, CC-MAC மென் பொருள் தொழில்நுட்பம் வாயிலாக தானியங்கி Whatsapp மூலம்
உடனடி யாகச் சென்றடைந்து, அதன்மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும். பெறப்படு கின்ற புகார்கள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 44 மேற்பார்வைப் பொறியாளர் அலு வலகத்தில் 24 மணி
நேரமும் செயல்படும் வகையில் தலா 3 நபர்கள் வீதம் 132 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும்,
புகார்தாரரின் கைப்பேசி எண்ணிற்குப் புகாரின் எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு, அப்புகார் கள் சரி செய்யப்பட்டவுடன், அது குறித்த தகவலும், குறுஞ்செய்தியாக
அனுப்பப்படும். மின்வாரியம் தொடர் பாக தமிழ்நாடு முழுவதும் சமூக வலை தளம் (Facebook, Twitter, Instagram) மூலம் பதிவேற்றப்படும் புகார்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுப் பதற்கு Social Media Cell அமைக்கப்பட்டு
உள்ளது.
இந்நிகழ்வின்போது,
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்
துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதய நிதி ஸ்டாலின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிர தாப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment