தற்போதைய
காலகட்டத்தில் உலகின் நோயெதிர்ப்பு மற்றும் புரதத்தேவைக்காக இறைச்சி உணவுகள் முன்பை விட அதிகம் பயன்படுத்தப்பட்டு வரு கிறது. இதனால் இந்தியா பிரேசில் ஆஸ்திரேலியா போன்ற இறைச்சி ஏற்று மதி நாடுகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை தொடர்ந்து உலக நாடுகள் தொடர்புகொண்டு வருகின்றன.
சில
நிறுவன இணையதளங்களில் புகுந்து ஆர்டர்களை தங்கள் நாட்டிற்கான ஆர்டர்களாக மாற்றி இறைச்சி கொண்டுசெல்லப்படும் கப்பல் மற்றும் விமானத்தை தங்கள் நாடுகளை நோக்கி திசைதிருப்பும் இணையதள மோசடிகள் நடைபெறத் துவங்கியுள்ளது..
பிரேசிலைச்
சேர்ந்த ஜே பி எஸ்
என்ற அந்த நாட்டின் மிகபெரிய இறைச்சி நிறுவனத்தின் இணையதளத்தை அய்ரோப்பிய இணையதள மோசடியாளர்கள் முடக்கி உள்ளனர். இது ரஷிய மோசடிநபர்களின் செயல் என்று அமெரிக்க கூறியுள்ளது.
உலகின்
ஆகப் பெரிய இறைச்சி விநியோகிப்பாளரான JBS, நேற்று (ஜூன் 1) இணையத் தாக்குதலுக்கு உள்ளானது. இதன் காரணமாக இறைச்சி ஏற்றுமதியில் குழப்பம் ஏற்பட்டது, சில நாடுகளுக்குச்சென்றுகொண்டு இருந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சி வேறு நாடுகளுக்கு சென்று சேர்ந்தது தெரியவந்துள்ளது இந்த
தாக்குதல் குறித்து தாமதமாக அறிந்துகொண்ட நிறுவனம்
தனது இணையதளத்தை முடக்கி அனைத்துப் பணிகளையும் நிறுத்தியது, இதன் ஆஸ்திரேலிய இறைச்சி வெட்டும் மற்றும் பதப்படுத்து தொழிற்சாலை சில மணி நேரம் முழுவதுமாக நிறுத்தப் பட்டது.
இதன்
அமெரிக்க நிறுவனத்திலும் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன.
மிகப்பெரிய இறைச்சி நிறுவனத்தின் மீதான இணையத் தாக்குதலை அடுத்து, இறைச்சி விலை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதனால் சீனா,
வளைகுடா நாடுகளில் இறைச்சி
ஏற்றுமதியும் பாதிப்படையலாம் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment