மிகப் பெரிய இன அழிப்பு: கண்ணீர் வடிக்கும் கனடா மக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 5, 2021

மிகப் பெரிய இன அழிப்பு: கண்ணீர் வடிக்கும் கனடா மக்கள்

கனடாவில் மூடப்பட்ட குழந்தைகள் காப்பகம் ஒன்றிலிருந்து 215 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்த செய்தி வெளிவந்த பிறகு கனடா முழுவதும் பெரும் அதிர்வலை உருவாகியுள்ளது

1900 களில் கனடாவின் பழங்குடியின மக்களை தனிமைப்படுத்தி அவர்களை தங்களின் கலச்சாரத்தில் இருந்து விலக்கி வைக்க அவர்களின் பிள்லைகளை வலுக்கட்டாயமாக குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பப் பட்டனர், அங்கு ஸ்பானிஸ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அவர்களுக்குப் போதிக்கப் பட்டுள்ளது.

அதே போல் அவர்களின் கலாச்சாரத்தையும் மறக்கடிக்க முயற்சி செய்யப்பட்டது, இதற்கு இனங்காத சிறுவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகி மரணமடைந்திருக்கலாம் என்றும் அப்படி மரணமடைந்த சிறுவர்களின் உடல்கள் உள்ளேயே புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னதாக தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கை இத்தகையை பள்ளிகளில் பழங்குடிப் பிள்ளைகள் எதிர்நோக்கிய கொடுமைகளை விவரித்தது. இத்தகைய பள்ளிகளில் மொத்தமாக குறைந்தது 3,200 பிள்ளைகள் உயிரிழந்தனர். இந்த கம்லூப்ஸ் பள்ளியில் மட்டும் 1915க்கும் 1963க்கும் இடையே குறைந்தது 51 பேர் மடிந்தனர்

இந்தக் கண்டுபிடிப்பு, வரலாற்றில் நடைபெற்ற துயர சம்பவம் என வர்ணித்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இது குறித்து வெட்கப்படுவதாகவும் இந்த உண்மையை நாட்டிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று கூறினார்.

19ஆம் நூற்றாண்டு முதல் 1970கள் வரை, 150,000க்கும் அதிகமான பழங்குடி பிள்ளைகள்  தங்களது தாய்மொழியைப் பேச தடை செய்யப்பட்டனர். இதுவரை சுமார் 6,000 பிள்ளைகள் மாண்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக கனடிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக 2008ஆம் ஆண்டில் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

 அமெரிக்காவின் இரண்டு கண்டங்களிலுமே அய்ரோப்பியர்களான டச்சு, ஸ்பானிஸ், பிரான்ஸ் மற்றும் ஆங்கிலேயர்கள் 1500 துவங்கி 19 ஆம் நூற்றாண்டு வரை அம்மண்ணின் மைந்தர்களை தொடர்ந்து அவர்களின் கலாச்சாரம் மொழிகளை கடைபிடிக்க தடைவித்தித்து பெண்களுக்கு கருத்தடைகளை வலுக்காட்டயமாக செய்தும் ஆண்களுக்கு மருந்துகளைக் கொடுத்தும் அவர்களின் சந்ததியினரை அழித்துவந்தனர். கனடா போன்ற பகுதிகளில் அடர் வனங்களில் வாழ்ந்த பழங்குடியின மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்களின் பிள்ளைகளை அழைத்துவைத்து முகாம்களில் அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அமெரிக்க நாடுகளின் நடந்த இனப்படுகொலையின் உயிரோட்டமான ஆவணமாக சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளன என்று கனடிய ஊடகங்கள் கூறியுள்ளன.

No comments:

Post a Comment