விண்வெளி குறித்த ஆர்வலர்களுக்கு.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 5, 2021

விண்வெளி குறித்த ஆர்வலர்களுக்கு....

விண்வெளி குறித்த அனைத்து தகவல் புகைப்படம் விண்வெளித்தொடர்பான புகைப்படம், ஆவணப்படம் என அனைத்தும் திரையிட தனி தொலைக்காட்சி துவங்க உள்ளனர்.

நியூயார்க் டைமஸ்  செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ள செய்தி JTM The Discovery Channel  அண்மையில் ஆய்வு நிலையத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் ஒரு போட்டியை அடுத்த ஆண்டு நடத்தவிருப்பதாகக் கூறியிருந்தது..

இந்நிலையில் ஆய்வு நிலையத்திற்குத் தனியார் நிறுவன விண்வெளி வீரர்களை அனுப்புவதுகுறித்து ஆக்ஸிம் ஸ்பேஸ்  எனும் நிறுவனத்துடன்  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது.

பூமியின் சுற்றுப்பாதையை நோக்கிச் செல்லும் பயணங்கள் அனைத்தும் பெரும் பணக்காரர்களால் மட்டுமே தற்போதைக்கு மேற்கொள்ளமுடியும்.

இருப்பினும், அதுவே மனித விண்வெளிப் பயணங் களில் காணக்கூடிய பெரும் முன்னேற்றம் என்று நாசா தெரிவித்தது.

2030ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் குறைந்தது  அய்ந்து விண்வெளி தனியார் ஆய்வு நிலையங்கள் அமைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

அவை ஆராய்ச்சிக்காகவோ, செவ்வாய்க் கோளுக் குச் செல்வதற்கான ஆயத்தப் பணிகளுக்காகவோ, சில கேளிக்கைத் துறைக்காகவோ செயல்படலாம் என்று குறிப்பிட்டது. மேலும் விண்வெளிப்பயணம் அது தொடர்பான அனைத்தையும் ஒரு சேர கண்டுகளிக்க அதற்கென தனி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை துவங்க உள்ளதாகவும் இது டிஸ்கவரி சேனலுடன் இணைந்து ஒளிபரப்பபடும் என்றும் அந்தச் செய்தியில்  தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment