கார்ட்டூன் போடுகிறார்களாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

கார்ட்டூன் போடுகிறார்களாம்

பெண்கள், திருநங்கைகளையும் அர்ச்சகர் ஆக்கணும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சொல்லுகிறதாம்.

அதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிகரெக்ட் கோயில்லே இனிமே தீர்த்தத்துக்குப் பதிலாக சூப்பும், புளியோதரைக்குப் பதிலாக பிரியாணியும் பிரசாதமா கொடுக்கணும் - என்கிறாராம். அதற்குத் தி.. தொண்டர் என்ன சொல்லுகிறாராம்?

அய்யா, சரியாகச் சொன்னீங்க, கோயில்லே கூட்டம் குறைஞ்சுபெரியாருக்கு வெற்றின்னு நாம பேசுறத்துக்கு இதுதான் ஒரே வழி! என்று தி.. தொண்டர் சொல்லுகிறாராம். இதுதான்துக்ளக்கார்ட்டூனில் கண்டுள்ள வாசகம்.

தாழ்த்தப்பட்டவர்களும், ஹிந்துக்கள் என்பார்கள். ஹிந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கூவிக் கூவி அழைப்பார்கள். அவர்களுக்கு ஆள் பலம் வேண்டும் என்றால் பார்ப்பனர் அல்லாதார் தேவை - மற்றபடி கோயில் போன்ற அவர்களின் அந்தரங்க ஆதிக்க புரியில் நுழைய அனுமதிக்கவே மாட்டார்கள்.

(கோயில்களைக் கட்டியதில் இந்தப் பார்ப்பனரின் பங்கு என்ன? உடலுழைப்பு உண்டா? பொருள் உதவி உண்டா? கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல கருவறைக்குள் புகுந்து கொண்டு, கோயில் கட்டிய தமிழனைப் பார்த்துசூத்திரப் பயலே வெளியே போ!’ என்கிறானே - இன்னும் அந்நிலை நீடிக்கிறதே!)

நாமும் திரும்பிக் கேட்கலாமே - கார்ட்டூனும் போடலாமே!

பார்ப்பனர்கள் இதோ பேசுகிறார்கள்:சூத்திராள், ‘பஞ்சமர்களே கோயில் எங்களுக்கு மட்டுமேதான் - தேவ நாதன்களும், பத்ரி நாராயணன்களும் எதற்கு இருக்கிறோம்? இரகசிய இடங்கள் எங்களுக்குத் தேவையில்லையா? எங்கள் கடவுள் கிருஷ்ணன் செய்ததைத்தான் நானும் செய்கிறேன் என்று ஆசாராம் சாமியார் சொன்னது உங்களுக்கு  மறந்து போய்விட்டதா? எங்களுக்கு ஏன் இடைஞ்சல் தரு கிறீர்கள்?” - என்று சொல்லுவதுபோல எங்களாலும் கார்ட்டூன் போட முடியாதா? தெரியாதா?

No comments:

Post a Comment