'கற்றுக் கொண்டு' வருவது வேறு; 'அறிந்து கொண்டு' வருவது வேறு!
பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் சொற்பொழிவு-3இல் தமிழர் தலைவர் விளக்கவுரை
சென்னை, ஜூன் 29 ‘கற்றுக் கொண்டு' வருவது வேறு; ‘அறிந்து கொண்டு' வருவது வேறு.இந்த இரண்டிற்கும் உள்ள - பொருள்களுக்குள்ள வித்தியாசத்தைத் தெளி வாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் சொற்பொழிவு-3
கடந்த 27.5.2021 மாலை 7 மணியளவில் பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளில் ‘‘சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - பொதுவு
டைமை இயக்கம்பற்றிய தந்தை பெரியாரின் அரிய விளக்கமும் - இன்றைய தொடர்ச்சியும்'' என்ற தலைப்பில் மூன்றாவது சொற்பொழிவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார்.
வரவேற்புரையாற்றிய பேரன்பிற்குரிய கழகப் பொருளாளர் அவர்களே, கழகத் துணைத் தலைவர் உள்பட இயக்கப் பொறுப்பாளர்களே, கழக உறவுகளே, பகுத்தறிவாளர்களே, அருமை நண்பர்களே, தாய்மார் களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்கள் பெயரால் அமைந்த நினைவு அறக்கட்டளை சார்பில், மூன்றாவது ஆய்வு சொற்பொழிவில், முந்தைய பொழிவின் தொடர்ச் சியாகவே சில செய்திகளை நாம் பார்க்கவேண்டும்.
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், சோவியத் ரஷ்யா உள்பட மேலை நாடுகளுக்கு செல்ல திட்ட மிட்டது - அவர்கள் சென்றதெல்லாம் முறைப்படி எல்லா ஏற்பாடுகளுடன்தான் சென்றார்கள்.
ரகசியமாகவோ, பாஸ்போர்ட் இன்றியோ செல்ல வில்லை. அப்படி சில தவறான தகவல்கள் பரப்பப்படு கின்றன என்றால், அந்தத் தவறான தகவல்கள் நிலைத்து விடக் கூடாது; உண்மைகள் திரிக்கப்படக் கூடாது; பொய்கள் இடம்பெறக் கூடாது என்ற அளவிற்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்காகத்தான் முந்தைய பொழிவில், ஒரு கட்டுரையில் எழுதப்பட்ட கருத்தை எடுத்துத் தெளிவாக சொன்னோம். எல்லோரும் அதனை செவி மடுத்துக் கொண்டிருந்தீர்கள்.
திரிபுவாதத்திற்கு ஆளாக்கப்படக் கூடாது
ஏனென்றால், ஆய்வாளர்கள் என்பவர்கள் நாளை எங்கேயாவது ஒரு மூலையில், ஏதாவது ஓரிடத்தில் சொல்கின்ற தகவல்கள், பின்னாளில் மாறுபாடாகப் பயன்படுத்தக் கூடும் என்பதற்காகத்தான், தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரையில், அவருடைய கருத்துகளை பின்னாளில் வரக் கூடிய ஆய்வாளர்களோ அல்லது வருங்கால சந்ததியினர்களோ திரிபுவாதத்திற்கு ஆளாக்கப்படக் கூடாது, அவருடைய காலத்தில் வாழ்ந்த அவருடைய தொண்டர்களாகிய நாம், அவை பாதுகாக்கப்படவேண்டும் என்று கருதுகின்றோம். அது நமது வாழ்நாள் கடமையாகும்.
பெரியாரைப் பரப்புகின்ற கட்டம் தாண்டி, பாதுகாக் கின்ற பணியையும், கடமையை நாம் ஏற்றிருக்கின்றோம், இப்பொழுது.
‘‘ப்ரண்ட் லைன்'' கட்டுரை கருத்திற்கு மறுப்பு!
அந்த அடிப்படையிலேதான் ‘ப்ரண்ட் லைன்' பத்திரிகையில் வந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்து, கழகப் பொருளாளர் அருமை நண்பர் குமரேசன் அவர்கள் மூலமாக, அந்த ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு சொன்னபொழுது, மிகப் பெருந்தன்மையாக, ‘‘Response: Periyar's Soviet tour'' என்ற தலைப்பில், உடனடியாக தன்னுடைய பத்திரிகையில் மின்னஞ்சல் பகுதியில் ‘‘ப்ரண்ட் லைன்'' மே 26 ஆம் தேதி மிகத் தெளிவாக ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அடுத்தபடியாக, பிரிண்ட் மீடியா என்று சொல் லப்படக் கூடிய அச்சு ஊடகத்தில்கூட அது இடம் பெறக்கூடும்.
அதில் இருக்கக்கூடிய செய்தியை மட்டும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
This has the reference to the ‘Tribute’ article written on V. Anaimuthu by Prof V. Arasu (“V. Anaimuthu (1925-2021): Crusader for social justice”, Frontline, May 7, 2021).
While referring to the visit of E.V. Ramasamy Periyar to the Soviet Union in 1932, the author says, “when Singaravelar received an invitation to visit the Soviet Union, he requested Periyar to make the trip since he knew he would not be permitted to travel to the Soviet Union by the British Government”. This information is not correct.
Periyar commenced his Europe tour in December 1931 on his own. Apart from the Soviet Union, he visited Asian and European countries like Greece, Turkey, Germany, and England.
Prior to the tour, Periyar had translated the historic Communist Manifesto by Karl Marx and Friedrich Engels into Tamil and published it in his Kudi Arasu magazine. The publication was serialised in the magazine for several weeks. Periyar used to propagate that the ultimate goal of his Self Respect Movement was equality, which would manifest itself as “communism”. With that respect for “communism” in mind, he undertook his European tour to assess the achievements of the Union of Soviet Socialist Republics during the reign of Joseph Stalin.
In his various public speeches about his Soviet visit, he said he had stayed for a long period in that country and witnessed the May Day march held on May 1, 1932 in Moscow as a state guest. He did not state anywhere that the invitation for the visit was transferred to him by Singaravelar with whom he had worked during the early 1930s. Even Singaravelar, a prolific writer and public speaker, did not mention anywhere that he had passed on his invitation to Periyar.
The tour was undertaken on Periyar’s own initiative and plan. There is no documentary evidence to prove what is stated in the article.
V. Kumaresan, Treasurer
Dravidar Kazhagam, Chennai
எங்களுடைய உளமார்ந்த நன்றி!
மேற்கண்ட செய்தியை மிகத் தெளிவாக வெளியிட்ட ‘ப்ரண்ட் லைன்' ஆசிரியர் குழுவிற்கு, குறிப்பாக ஆசிரியர் அவர்களுக்கு எங்களுடைய உளமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல நண்பர்களே, நாம் வெளியிட்டு இருக்கக்கூடிய புத்தகங்களிலேயே "பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்" நூலுக்கு முன்னுரை எழுதுகின்ற நேரத்தில்கூட, ‘குடிஅரசு' 12.3.1933 இல் - பெரியார் அவர்கள் திரும்பிய நிலையில், சொல்லிய ஒரு குறிப்பை எடுத்து என்னுடைய முன்னுரையில் பயன்படுத்தியிருக்கிறேன்.
புலவர் பா.வீரமணி அவர்களாலே தொகுக்கப் பெற்றிருக்கக்கூடிய மிக அற்புதமான மூன்று தொகுப்புகளின் முன்னுரையில், 12.3.1933 இல் பக்கம் 2 இல் ‘குடிஅரசு' இதழிலிருந்து எடுத்துக்காட்டியிருக்கிறோம்.
அய்ரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து தமிழ்நாடு திரும்பிய தந்தை பெரியாருக்கு விருதுநகரில் அளித்த ஒரு வரவேற்பின்போது தந்தை பெரியார் பேசுகிறார்:
‘‘தோழர்களே! எனது அய்ரோப்பிய யாத்தி ரையாலோ குறிப்பாக ரஷ்ய யாத்திரையாலோ நான் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை. ஆனால், நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும் அக்கொள்கைகளால் தான் உலகமே விடுதலையும், சாந்தியும், சமாதானமும் அடையக்கூடும் என்று தெரிந்தேன். இதுதான் உங்களுக்கு அய்ரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என்கின்ற முறையில் சொல்லும் சேதியாகும்.''
இதில், இரண்டு செய்திகளை விளக்கி நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.
மேற்கண்டவற்றில், தந்தை பெரியார் அவர்களின் சொற்களைக் கூர்ந்து நோக்குங்கள்.
அறிந்து கொண்டு திரும்பியவை அனேகம் இருக் கலாம்; ஒவ்வொரு சொல்லையும் தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்துகின்றபொழுது, மிக ஆழமாகப் பயன்படுத்துவார்கள்; மேலெழுந்தவாரியாகவோ, அலங்காரத்திற்காகவோ அவர்கள் பயன்படுத்தியது இல்லை.
‘கற்றுக் கொண்டு' வருவது வேறு; ‘அறிந்து கொண்டு' வருவது வேறு!
அந்த வகையில் சொல்லுகின்றபொழுது, நான் கற்றுக் கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் இல்லை என்று சொல்லும்பொழுது, சிலர் என்ன இப்படி சொல்கிறாரே என்று நினைக்கலாம்.
அறிந்துகொண்டு திரும்பியவை அனேகம் இருக் கலாம்; கற்றுக் கொண்டு வருவது வேறு; அறிந்து கொண்டு வருவது வேறு.
இந்த இரண்டிற்கும் உள்ள - பொருள்களுக்குள்ள வித்தியாசத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தந்தை பெரியார், தனது இயக்கம், சரியான கொள்கை, லட்சியப் பாதையில் செல்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளக் கிடைத்த அனுபவமே அது என்பதை எவ்வளவு அழகாக விளக்கியுள்ளார் பாருங்கள்.
அதேநேரத்தில், அந்த விளக்கத்திற்குத்தான் பல செய்திகளை பின்னாலே எடுத்துச் சொல்கிறார்.
நாகை கே.முருகேசன் - சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் எழுதிய நூல்!
அதுமட்டுமல்ல, சிங்காரவேலருக்குக் கிடைத்த அழைப்பை இன்னொருவருக்குக் கொடுத்து, அதன் மூலமாக அனுப்பப்பட்டவர் பெரியார் என்கிற கருத்துக்கு ஆதாரமில்லை என்பதற்கு, "சிங்காரவேலு தென்னிந்தி யாவின் முதல் கம்யூனிஸ்ட்" என்று நாகை கே.முரு கேசன் அவர்களும், சி.எஸ்.சுப்பிரமணியம் அவர்களும் எழுதி, நியூ செஞ்சுரி புக் அவுஸ் பதிப்பாக வெளிவந்திருக் கின்ற புத்தகமே! அதில் எல்லாவற்றையும் பதிவு செய் திருக்கிறார்கள்.
பக்கம் 135 இல்,
‘‘அய்யா
மேல் நாட்டு பயணம் சென்றார். அவர் சென்று பார்த்த நாடுகளில், சோவியத் ஒன்றியமும் ஒன்றாகும். அவரது அயல்நாட்டு பயணத்தின்கணி சமான நாட்களில், சோவியத் நாட்டைப் பார்ப்பதில் செலவழித்தார். (ஏறத்தாழ 100 நாட்களுக்கு அதிக மாகத் தங்கியிருந்தது அங்குதான்)
‘போஸ்வோஸ்னிக்' என்று அறியப்பட்ட சோவியத் நாத்திக சொசைட்டியின் விருந்தினராக இருந்தார்" என்று குறிப்பிடுகிறது அந்த நூல்.
ரஷ்ய அதிகாரியாக இருந்த ஒருவர் மிகவும் அனு பவம் வாய்ந்தவர். என் நினைவில் இருந்து சொல்கிறேன்.
‘போஸ்வோஸ்னிக்' வார்த்தையைப் பயன்படுத்திய தந்தை பெரியார்!
சென்னையில் மீரான்சாகிப் தெருவில் உள்ள அய்யாவின் வீட்டில் வந்து சந்தித்தார். அப்பொழுது நான் ‘விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்த நேரம்.
‘விடுதலை' மலரில்கூட அந்தத் தகவலைப் பதிவு செய்திருக்கிறோம்.
அப்பொழுது ‘போஸ்வோஸ்னிக்' என்ற வார்த் தையை சொன்னபொழுது, இளைஞராக இருந்த அதிகாரி, அய்யாவிற்குக் கை கொடுத்து குலுக்கிவிட்டு, ‘‘ரஷ்யாவிற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு சென்று கூட, மிகத் தெளிவாக நாத்திக சொசைட்டி யைப்பற்றி நீங்கள் சொல்கிறீர்களே?" என்று சொன்னார்.
அந்த நூலிலிருந்து தொடர்கிறேன்.
"பாகு, திப்பிலிஸ், லெனின்கிராடு, மாஸ்கோ போன்ற நகரில் அவர் சொற்பொழிவாற்றினார். பிறகு அவர் இந்தியாவிற்கு வந்தார்.
சோவியத் பயணம் ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக்கியது.
சிங்காரவேலு அவர்கள் 'குடிஅரசு பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி வந்த காலத்தில் சுயமரியாதை இயக்கத் தலைவராகிய ஈ.வெ.ராமசாமி அவர்கள் மேலை நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்குச் சென்றிருந்தார். ஈ.வெ.ரா. 13.12.1931 அன்று மேல்நாட்டுப் பயணத்திற்குப் புறப்பட்டார். அவர் சென்று பார்த்த நாடுகளுக்குள் சோவியத் ஒன்றியமும் ஒன்றாகும். அவரது அயல் நாட்டுப் பயணத்தில் கணிசமான நாட் களை சோவியத் நாட்டைப் பார்ப்பதில் செலவழித்தார். ‘போஸ்வோஸ்னிக்' (Bozvosnik) என்று அறியப்பட்ட சோவியத் நாத்திக சொசைட்டியின் விருந்தினராக இருந்தார். பாகு திப்பிலிஸ், லெனின்கிராடு, மாஸ்கோ ஆகிய நகரங்களில் அவர் சொற்பொழிவாற்றினார். 1932 நவம்பர் மாதம் அவர் இந்தியாவிற்குத் திரும்பினார்.
மதத்தின் பிடிப்பிலிருந்து மக்கள் விடுதலை அடைய...
சோவியத் ஒன்றிய பயணம் ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக்கிற்று. மதம் என்பதை வெற்றிகரமாகத் தாக்கி வீழ்த்திய ஒரே ஒரு நாடு அதுதான். மாபெரும் அக்டோபர் புரட்சியின்மூலம் முதலாளித்துவ அமைப்பினை வீழ்த்தி, தனது நாட்டில் சோஷலிசத்தைக் கட்டி வளர்த்து வரும் சோவியத் யூனியன் ஒன்றுதான் மதத்தின் பிடிப்பிலிருந்து மக்கள் விடுதலை அடைய வகை செய்துள்ளது என்பதைத் தெளிவாக்கியது."
(இதுபோன்ற செய்திகள் வரும்பொழுது சிங்கார வேலரோ மற்றவர்களோ பதிவு செய்திருப்பார்கள் அல்லவா! அதில் எந்தப் பதிவும் கிடையாது. ஆகவே, அது உண்மை இல்லை என்பதற்கான மற்றொரு ஆதாரம் இதோ)
"ஈ.வெ.ராமசாமி அவர்களும் எஸ். ராமநாதன் அவர்களும் வெளி நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, சோஷலிஸ்டு நாட்டில் தான் மக்கள் மதம் மற்றும் பல குருட்டுத்தனமான நம்பிக்கையில் பிறந்த பழக்கவழக் கங்களை வீழ்த்தி வருகின்றனர் என்பதை நேரில் கண்டறிந்து வந்த சமயத்தில் சிங்காரவேலு அவர்கள் அந்த உண்மையை இங்கு சுயமரியாதை இயக்க ஊழியர்கள் முன் எடுத்துரைத்து வந்தார். அவர்களு டைய சமு தாய சீர்திருத்த இயக்கமும் மதம், ஜாதி, தீண்டாமை, மற்றும் இச்சமூகத்திலுள்ள தீமைகள் ஆகியவற்றிற் கெதிராக அவர்கள் நடத்தும் போராட்டம், அதன் குறிக் கோளை அடைவதற்கு சரியான வழி காண வேண்டுமெனில், மாபெரும் அக் டோபர் புரட்சியையும், சோவியத் யூனியனையும் பற்றி சரிவரப் புரிந்து கொள் வது அவசியமாகும் என்ற கருத்தை முன் வைத்தார். அந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு சோஷலிசம் ஒன்றே உத்தரவாதம் தரும் அமைப்பாக இருக்கும் என்ற விஷ யத்தை அவரது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் நன்கு விளக்கின."
இவ்வளவு கருத்துகளை சிங்காரவேலர் அவர்கள் சொல்லுகின்ற நேரத்தில் நண்பர்களே, இவர்கள் சொல் வது உண்மையாக இருந்திருந்தால், சிங்காரவேலரே பதிவு செய்திருப்பாரே, "நான்தான் அனுப்பினேன், ரொம்ப மகிழ்ச்சியாக" என்று.
அதுபோன்ற எந்த ஆதார மும் கிடையாது. ஆகவே, அப்படியில்லை என்பதற்கு இவை மிக முக்கியமான செய்திகளாகும்.
(தொடரும்)

No comments:
Post a Comment