ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 29- தமிழ் நாட் டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறும், மாநிலங் களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கான உள்ஒதுக் கீட்டை 90 விழுக்காடாக உயர்த்துமாறும் வலியுறுத்தி, ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச் சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (28.6.2021) கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தொடக்கத்திலேயே, தாங்கள் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, ஒன்றிய அரசின் சார்பில் கரோனா தடுப்பூசிகளை கொள் முதல் செய்து, 18 வயதுக்கு மேற் பட்ட தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு மாநிலங் களுக்கு இலவசமாக வழங்குவதற்கு ஒப்புக் கொண்டதற்காக என் நன் றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ் நாட்டில் தடுப்பூசி போடுவது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது!
இந்த முடிவும், தடுப்பூசிக்கு தயக்கம் காட்டுவதை அகற்றி, தடுப் பூசி போடுவதை ஒரு மக்கள் இயக் கமாக மாற்றுவதற்கும் என்னுடைய அரசால் தொடர்ந்து மேற்கொள் ளப்பட்டு வரும் முயற்சிகளும் இணைந்து தமிழ் நாட்டில் தடுப் பூசி போடும் செயல்பாடு நடப்பு மாதத்தில் மூன்று மடங்காக உயர்த் தப்படுவதை உறுதி செய்துள்ளது.
கடந்த சில வாரங்களில், தடுப் பூசி போடுவது தீவிரமடைந்த பிறகு தடுப்பூசிகள் இருப்புதான் முதன்மையான தடையாக இருந்து வந்தது. இது எங்களுக்கு குறிப்பாக எங்களுக்கான தடுப்பூசிகள் ஒதுக் கீடு, நாட்டில் உள்ள மாநிலங்களுக் கிடையே மிகவும் குறைவாக இருந்த மாநிலங்களில் ஒன்றாக, அதிலும் குறிப்பாக ஆயிரம் பேருக்கு தேவையான டோஸ்கள் என்ற அடிப்படையில் மிகக்குறை வாக இருந்ததும் குறிப்பிடத்தக்க தாகும். எங்கள் மாநிலத்திற்கான தடுப்பூசிகள் ஒதுக்கீட்டை கடந்த காலத்தில் குறைவாக அளிக்கப்பட் டதை சரி செய்வதற்காக ஒருகோடி டோஸாக உயர்த்தும்படிகோரி நான் தங்களுக்கு கடிதம் எழுதியி ருந்தேன். ஆனால் அது நிறைவேற் றப்படவில்லை.
ஏற்கெனவே தமிழ் நாட்டிற்கு தடுப்பூசிகள் குறைவாக வந்தது!
ஜூன் - ஜூலை மாதங்களுக்கான உயர்த்தப்பட்ட ஒதுக்கீட்டு உயர்வு மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப் பட்டுள்ளது. அவர்கள் அதிக அள விலான ஒதுக்கீட்டைப் பெற்றிருந் தனர். அதனால் அவர்கள் ஏற் கெனவே அதிக அளவிலான பேர் களுக்கு தடுப்பூசிகள் போட்டுள் ளனர். எனவே, நான் தற்போது என்னுடைய முந்தைய கோரிக் கையை மீண்டும் வலியுறுத்துவ துடன் உடனடியான தங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் மற்றொரு பிரச்சினை குறித்தும் வலியுறுத்த விரும்புகிறேன்.
புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசிகள் கொள்கையின்படி, ஒன்றிய அரசு 75 சதவிகித தடுப் பூசிகளை வாங்கிக் கொண்டிருக் கிறது. மீதமுள்ள தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கட் டணம் வாங்கிக் கொண்டு தனி நபர்களுக்குதடுப்பூசி போடுவதற் காக, வாங்கிக் கொள்ள அனும தித்து வருகிறது. தற்போது கைவசம் உள்ள தடுப்பூசி களை தனியார் மருத்துவமனைகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு அனுமதி அளிக்க நான் ஒப்புக்கொண்டபோது, தனியார் மருத்துவமனைகளுக்கு மொத்தத்தில் 25சதவிகிதம் ஒதுக்கீடு செய்வது, அவர்கள் உண் மையாகப் பயன்படுத்துவதோடு ஒப்பிடும் போது மிக அதிகமாக இருக்கும் என்பதை தங்கள் கவனத் திற்கு கொண்டு வரவிரும்புகிறேன். தமிழ் நாட்டில் மொத்தம் 1.43 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் மொத்தமாகப் போடப்பட்டு உள்ளன.
அவற்றுள் தனியார் மருத்துவ மனைகள் 6.5 லட்சம் டோஸ்களை மட்டுமே பயன்படுத்தியுள் ளன. இது 4.5 சதவிகிதமே ஆகும். நடப்பு மாதத்திலும் கூட, மாநிலத்தில் போடப்பட்ட 43.5 லட்சம் டோஸ்களில் தனியார் மருத்துவ மனைகள் 4.5 லட்சம் டோஸ்கள் தடுப்பூசிகளை மட்டுமே பயன் படுத்தியுள்ளன. இது வெறும் 10 சதவிகிதமே ஆகும்.
அறிவுபூர்வமான செயல்பாட்டுடன் பங்கீடு
மேற்கண்ட தேவைக்கும் வழங் கலுக்கும் இணையில்லாத நிலை மையோடு, தமிழ் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளிடம் 7 முதல் 8 லட்சம் வரையிலான டோஸ்களே கையிருப்பில் இருப் பதும், தனியார் மருத்துவமனை களில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு தேவையான அளவுக்கு இணை யான தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் அரசுமருத்துவமனைகளில் வெறும் 2 லட்சம் டோஸ்கள் தடுப் பூசிகள்மட்டுமே கையிருப்பில் உள்ளன. இது அவற்றின் ஒரு நாள் பயன் பாட்டுக்கே குறைவான தாகும். இதனை மிகவும் அறிவுபூர் வமான செயல்பாட்டின் அடிப் படையிலான பங்கீடு அளிக்கப் படுவதன் மூலமே சீர் செய்யமுடியும்.உற்பத்தி செய்ப்படும் தடுப்பூசிகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு செய்வது உற் பத்தியாளர்களின் அறிவுபூர்வ மற்றதாகும். அவர்களை ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒப்பீட்டு அளவில் சிறப்பான விலைக்கு விற்க அனுமதிப்பது போன்றதாகும். இது ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதோடு, தற்போதைய தேவை தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு சிறந்த அளவிலான கட்டணத்தை நிர்ணயிப்பதும் நம்முடைய மக்களுக்கு தடுப்பூசியை இயன்ற அளவில் வேகமாக, அதிகமாக போடுவதற்கான உடனடியான இலக்கைஎட்ட இயலாமல் செய் வதாகும். இதனை எட்டுவதற்கு அரசு மருத்துவமனைகளுக்கு அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் மூலமே சாதிக்க முடியும். அதே நேரத்தில் தடுப்பூசி உற்பத்தியாளர் கள் தனியார் மருத்துவமனைக ளுக்கான ஒதுக்கீட்டைக் குறைப்ப தன் மூலம் பாதிக்கப்பட்டு விடவும் கூடாது.
தற்போதுள்ள புதிய கொள் கையான இணைக்கப்பட்ட விலையின்படி உறுதி செய்வதற்காக ஒன் றிய அரசின் கொள் முதல் விலை உயர்த்தப்படுவதன் மூலம் உறுதி செய்யப்படவேண்டும்.
தேவைப்படும் அளவிற்கு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு!
மேற்கண்ட பிரச்சினைகளைப் பரிசீலித்து, கீழ் க்கண்ட நடவடிக் கைகளை உடனடியாக மேற்கொள் வதன் மூலம் தற்போது இருப்பில் இருக்கும் தடுப்பூசிகளை இயன்ற வரை குறுகிய காலத்தில் பயன்படுத் தப்படுவதற்கு ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்படவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அ) பல்வேறு மாநிலங்களுக்கு இதுவரை ஒதுக்கீடு செய்யப் பட் டுள்ள தடுப்பூசிகளை ஆயிரம் மக் களுக்கான விகிதத்தின் அடிப்படை யில் மதிப்பீடு செய்து தேவைப்படும் ஈடு செய்யும் ஒதுக்கீடுகளை குறை வாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநி லங்களுக்கு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆ) அரசு மருத்துவமனைகளுக் கும் தனியார் மருத்துவமனைகளுக் கும் இடையிலான தடுப்பூசி ஒதுக் கீட்டை தற்போது உள்ள 75:25 என்ற விகிதத்துக்கு மாறாக 90:10 சத விகிதமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன்.
இவ்வாறு தமிழ் நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின்அவர்கள் ஒன்றிய மக்கள் நல்வாழ் வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment