‘ஹிந்துக்களே' ஒன்று சேர்வீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 22, 2021

‘ஹிந்துக்களே' ஒன்று சேர்வீர்!

பார்ப்பனரைத் தவிர மற்றவர்கள் யாரும் அர்ச்சகர்கள் ஆகவே கூடாது - ஆமாம்! கோவிலில் அவாள் அடிக்கும் தனியுரிமைக் கொள்ளைக்கு ஆபத்து வந்துவிடுமே!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை யென்றால் பார்ப்பனர்களின் பார்வையில் அனைத்து மதத்தினரும் அர்ச்சகர்களாகக் கோருவதாம்!

ஹிந்து மதத்தில் உள்ள பார்ப்பனர் அல்லா தாரானவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் கிடையாது - அவர்கள் எல்லாம் வேறு மதத்தவர்கள்,  பார்ப்பனர்கள் மட்டும்தான் ஹிந்துக்கள் என்கிறதுதுக்ளக்' கூட்டம்.  பார்ப்பனர் அல்லாதார்  எல்லாம் ஹிந்து மதத்தை விட்டு வெளியேறுக என்கிறார்களா?

சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கட்டும்!

No comments:

Post a Comment